மேலே நீங்கள் பார்க்கும் அழகுப் பூச்சி நான் தான் . கருப்பும் மெல்லிய ஆரஞ்சு நிறமும் கலந்து வெள்ளைப் புள்ளிகளும் கொண்ட எனது இறக்கைகள் அழகோ அழகு.ஆபத்து இல்லாத அழகா? ஆபத்து இருக்கிறது...பின்னர் சொல்கிறேன். !!!
ஆங்கிலத்தில் எனது பெயர் monarch butterfly . தேமதுரத் தமிழில் எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள். அரசன் வண்ணத்துப்பூச்சி அல்லது
அரசி வண்ணத்துப்பூச்சி அல்லது ராஜ வண்ணத்துப்பூச்சி என எப்படி வேண்டுமானாலும் !!!
செப்டம்பர் மாதம்...கனடா நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் ஈரி ஏரியின் (Lake Erie ) கரையில் ஒரு மரத்தில் நெக்டார்(Nectar) உண்டு
கொண்டிருக்கிறேன். கோடைக்காலம் முடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இலையுதிர் காலம் ஆரம்பிக்கும். சில்லென்று அடிக்கும் காற்றில் இருக்கும் குளிர் தன்மைகளை வைத்து இதை கணிக்கும் திறன் எனக்கு இருக்கிறது...ஐயோ !!! குளிர் என்னால் தாங்க முடியாது.. இலையுதிர் காலம் முடிந்து குளிர் காலம் வரும்..கனடா மற்றும் அமெரிக்காவில் குளிர் காலம் ஒரு கொடுமை. என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. நான் வேறு எங்காவது செல்ல வேண்டும் இந்தக் குளிரில் இருந்து தப்பிக்க ..
நிறைய பூக்களிலிருந்து நெக்டார் குடித்து என்னை தயார் செய்து இதோ பறக்கத் தொடங்குகிறேன். ஏரியின் மறுபக்கம் அமெரிக்க நாடு...அங்கு செல்லவேண்டுமெனில் இந்த ஏரியை கடந்தாக வேண்டும் ..கனடா நாட்டுக்கு மேலே செல்லச் செல்ல இன்னும் குளிரும்...இன்னும் மேலே போனால் ஆர்டிக் பகுதிகள்..அவ்வளவு தான் !! நான் செத்து விடுவேன்... இன்னாலில்லாஹ் !!
ஒரே வழி இந்தப் பக்கம் அமெரிக்கா செல்வது தான்... சுமார் 100 கிலோமீட்டரை விட அதிகமான நீளம் கொண்ட இந்த ஏரியை கடப்பது தான் எனது முதல் வேலை. என் வாழ்நாளில் நான் சில மீட்டர்களுக்கு மேல் பறந்ததில்லை..நீங்கள் உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் என் சின்ன கால்களுக்கும் உங்கள் உள்ளங்கைகளில் அடங்கி விடும் என் சின்ன இறகுகளுக்கும் இது ஒரு இமாலயப் பயணம். உயிர் பிழைக்க இது மட்டுமே வழி என்பதால் நிறைய தேனுண்டு என்னை தயார் செய்து கிளம்புகிறேன்..
பறந்து இந்த மாபெரும் ஈரி ஏரியை (Lake Erie ) கடந்து அமெரிக்காவில் நுழைகிறேன்..எனது பயணம் இங்கே முடியாது..குளிர்காலத்தில் இதுவும் என் மெல்லிய உடலுக்கு ஏற்றதல்ல...இன்னும் தூரம் செல்ல வேண்டும் ..பறக்கிறேன்..பறக்கிறேன்..பறந்து பறந்து 200 கிலோமீட்டர் ....இல்லை முன்னூறு , அடுத்து நானூறு ,ஐநூறு ,அறுநூறு, ஆயிரம் ..ஆயிரத்து ஐநூறு.....மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள் 3000 கிலோமீட்டர்கள் பறந்து மெக்ஸிகோ நாட்டின் ஒரு சின்ன காட்டில் வந்து சேர்ந்துவிட்டேன்...நான் மட்டுமல்ல என்னைப் போல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மற்ற monarch வண்ணத்துப்பூச்சிகளும் தான்..
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் !!
1. முதலில் உங்களிடம் சொன்னது போல வாழ்நாளில் சில நூறு மீட்டர்களுக்கு மேல் பறந்திராத நான் எப்படி 3000 கிலோமீட்டர்கள் பறந்து வந்தேன்?
2. அது கூடப் போகட்டும். கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாண்டி மெக்ஸிகோ நாட்டுக்கு அதுவும் இந்த சின்னக் காட்டுக்கு நான் எப்படி வந்தேன்?
3. என்னை விட்டுவிடுங்கள்...வட அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து என்னைப்போல கோடிக்கணக்கான பூச்சிகள் எப்படி சொல்லி வைத்தது மாதிரி சரியான நேரத்தில் இங்கு வந்து சேர்ந்தன?
4. பக்கத்து ஊருக்குப் போவதற்கே பல்வேறு போர்டுகளைப் பார்த்துப் போகும் நீங்கள், என்னால் வழி தவறாமல் 2000 மைல்கள் பறக்க முடிந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
இதெல்லாம் உங்களுக்கு புரியாது...ஏன் ?எனக்கே தெரியாது :)
..படைத்தவனுக்கே வெளிச்சம் :)
இங்கே மெக்ஸிகோவிலும் குளிர் காலம் தான் ...ஆனால் கனடா மற்றும் அமெரிக்கா போன்ற கடுங்குளிர் இல்லை...சமாளிக்கலாம்.. கூட்டம் கூட்டமாக ஒன்றோடொன்று உடம்பை ஓட்ட வைத்துக் கொண்டு இதோ இந்த சின்ன காட்டின் மரங்களில் தொங்கிக்கொண்டே ஒரு சிறு தூக்கம் (Hibernation) போடவிருக்கிறோம் ஜமாத்தாக...ரொம்ப எல்லாம் இல்லை..ஜஸ்ட் நாலு மாதம் மட்டுமே...கொர்ர்ர்ரர்ர்ர்ரர் !!!!!!
கொத்துக் கொத்தாய் monarch வண்ணத்துப்பூச்சிகள் தூங்கும் காட்சி
தூக்கத்தில் சில தகவல் சொல்றேன் கேட்டுக்கோங்க !!
கூட்டம் கூட்டமாக நாங்கள் அசந்து மாதக்கணக்கில் தூங்குவதை வாய்ப்பாக பயன்படுத்தி எங்களை துவம்சம் செய்ய வரும் எதிரிகள் பலர் உண்டு...அதிலும் இந்த பல்லிகள் இருக்கே ரொம்ப மோசம்..கடிச்சு சாப்பிடும் எங்கள...இங்க தான் ஒரு ட்விஸ்ட்...அழகு கொஞ்சும் இந்த உடல் முழுவதும் விஷம் :)
..அதனால் பல்லி தவளை போன்றவை எங்களை சாப்பிட முடியாது :) ..ஆனாலும் நீளமான அலகு வைத்திருக்கும் சில பறவைகள் சர்வ சாதரணமாக எங்கள் இறகுகளை பிய்த்துப் போட்டுவிட்டு விஷம் அதிகமான பகுதிகளையும் பிய்த்து விட்டு சாப்பிடும் :(
ஆஹா !! கொஞ்சம் விழிப்பு வருகிறது..குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தின் இளஞ்சூடு எங்கள் தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கிறது. மரத்தில் ஒட்டியிருந்த மாபெரும் கூட்டம் சிதறுகிறது..நான்கு மாதங்கள் கழித்து முதல் முறையாக பக்கத்தில் இருக்கும் சிற்றோடையில் நீர் பருகுகிறேன். ஆஹா என்ன சுவை !!!
குளிரில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட நீநீநீநீநீநீநீநீநீண்ட பயணம் மற்றும் தூக்கம் எல்லாம் வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டுவிட்டது...ஒரு நாள் என்னால் 80 மைல்கள் மட்டுமே அதிகபட்சம் பறக்க முடியும்..அதற்குள் தேன் கிடைக்கும் ஒரு இடத்தை அடைந்துவிடுவோம்..சாப்பிட்டு மீண்டும் பயணம்..இப்படி கனாடவில் இருந்து மெக்ஸிகோ வர மட்டுமே ஒரு மாத காலம் போய்விட்டது. ஆமாம் எங்கள் ஒட்டு மொத்த வாழ்நாளே ஒரு வருடம் கூட தேறாது...மாதங்களைத் தொலைத்து விட்டோம்...நீருண்ட பின்னர் முக்கிய விஷயம் இருக்கிறது..வேறென்ன இனப்பெருக்கம் தான்...நீருண்ட ஆண் பூச்சிகள் மரத்தில் இன்னும் தூங்கும் பெண் பூச்சிகளை பிய்த்து எழுப்புகிறது...குறை சொல்ல ஒன்றுமில்லை...நேரம் இல்லை எங்களுக்கு அதனால்தான் இந்த முயற்சி...
அடுத்து என்ன !! இனப்பெருக்கம் முடிந்தால் மகப்பேறு தான்..miscarriage ,abortion ,கருக்கலைப்பு, cord around neck, Fallopian tube pregnancy எல்லாம் உங்களுக்குத் தான்..எங்களுக்கு இல்லை ...எங்களுக்கு எப்போதுமே சுகப் பிரசவம் :)
கண்மூடுகிறேன் தோழர்களே...அவ்வளவு தான் என் வாழ்க்கை...நீங்கள் மட்டும் என்னவாம்? என்னைவிட சில வருடங்கள் அதிகம்..தட்ஸ் ஆல்..
நிறைவாக வாழ்ந்து என் சந்ததியை உங்கள் பார்வையில் விட்டுப் போகிறேன்..என் கதை உணர்ச்சி மிக்கதாய் இருந்தது என்று நீங்கள் சொல்வது காதில் சன்னமாய் கேட்கிறது..இல்லை தோழர்களே..எனது மகனின்/மகளின் கதையை கேளுங்கள் அதைவிட எனது அழகுப் பேத்தி/பேரனின் கதையை கண்டிப்பாகக் கேளுங்கள்...உணர்ச்சி மிக்க மற்றொரு அத்தியாயம் அது..கடைசியில் எனது கொள்ளுப்பேரன் சில கேள்விகளுடன் உங்கள் முன் வருவான்...கண்டிப்பாக உங்களால் விடை சொல்ல முடியாத கேள்விகள்....Don't மிஸ் இட் !!!
முதல் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள்
என் தாயின் கடைசிக் காலத்தில் சில தகவல்களை உங்களுக்குச் சொல்லமுடியவில்லை...வசந்த காலத்தின் தொடக்கத்தில் இனப்பெருக்கம் முடிந்து முட்டைகளை அவள் இட்டு வைத்தது எருக்கஞ்செடியில் (Milkweeds ). அதில் முட்டை பொரித்து வெளிவரும் நாங்கள் அந்த நச்சுப்பால் நிறைந்த எருக்கஞ்செடியின் இலைகளை கபளீகரம் செய்வதால் தான் எங்கள் உடலுக்கும் வந்தது அந்த நச்சுத் தன்மை. எதிரிகளிடமிருந்து எங்களைப் பாதுகாக்கும் இந்த விஷயம் இங்கே எங்கள் பிறப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது.
முட்டையிலிருந்து வெளிவந்து புழுவாகி பின்னர் பூச்சியாகி நாங்கள் முழு வண்ணத்துப்பூச்சியாவோம். மெக்ஸிகோ எங்கள் வீடல்ல வெறும் விடுதி மட்டுமே. என் தாய் தேசத்துக்கு நான் திரும்ப வேண்டும். நான் கனவில் கூட பார்த்திராத 3000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கனடா நோக்கிய எனது பயணம் ஆரம்பம். வழியே தெரியாத, கேள்விப்பட்டிராத ஒரு தேசத்துக்கு இவ்வளவு தொலைவு தாண்டி எப்படிப் போவேன் என்கிறீர்களா? எனக்கும் தெரியவில்லை...எல்லாம் படைத்தவன் தந்த இயற்கை உள்ளுணர்வு தான் (Natural Instinct ).
என் தாய் இந்தப் பயணத்தை நிகழ்த்தியதும் அப்படித்தான். சூரியன் தான் எங்கள் திசைகாட்டி (compass). பூமியின் காந்தப்புலத்தையும் சூரியனின் வெளிச்சத்தையும் வைத்து நாங்கள் திசை அறிந்து பயணிப்பதாய் உங்கள் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..எங்களிடம் கேட்கவா செய்தார்கள் :) ?
சுமார் 1000 கிலோமீட்டர்கள் பறந்துவிட்டேன் தோழர்களே. உடல் இசைய மறுக்கிறது...என் அம்மாவைப் போல் நான் அதீத பலசாலி அல்ல.சவலைப்பிள்ளை. நான் மட்டும் சவலையாக இருந்தால் பரவா இல்லை..என் அம்மாவின் தலைமுறையில் இருந்து பிறந்து வந்த லட்சக்கணக்கான என் தலைமுறை பூச்சிகள் அனைவருமே சவலைப்பிள்ளை தான். பயணம் முடிவுக்கு வரும் இன்னும் சில நாட்களில்..என் வரலாறு இத்தோடு முடிந்து விடுமா? இல்லை கூடாது...தன்னந்தனியே கனடா டு மெக்ஸிகோ போன பரம்பரையின் மானம் என்ன ஆவது?
பேசி புண்ணியமில்லை...நாங்கள் கூட்டம் கூட்டமாய் தரை இறங்குகிறோம். நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே எருக்கங்காட்டுக்குள்...இனப்பெருக்கம் செய்து எருக்க இலைகளில் முட்டையிட்டு இதோ கண்மூடுகிறேன்.. என் மகனிடம் நேரமிருந்தால் பேசுங்கள்..
இரண்டாம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் :
முட்டை to புழு to பூச்சி எல்லாம் முடிந்து நானும் பறக்கிறேன்.எங்கே ? என்று கேட்கிறீர்களா? வேறெங்கே.என் தாய் தேசம் நோக்கித் தான். எப்படித்தெரியும் எனக்கு அது எங்கே இருக்கிறது எவ்வளவு தூரம் பறப்பது என்றெல்லாம்? நீங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் அதிசயங்களின் தொடர்ச்சி தான் இது..எங்கு செல்ல வேண்டும் என்ற வரைபடம் (Map ) எனக்குள் இருப்பதாய் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
நானும் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து விட்டேன்...முந்தய தலைமுறை போல் என்னாலும் இலக்கை எட்ட முடியவில்லை...தரை இறங்கி எருக்கன்காட்டுக்குள் முட்டையிட்டு சந்ததியை உறுதிசெய்து மாண்டு போகிறேன்..அடுத்த தலைமுறை உங்களிடம் வரும்..பரிவாய்ப் பேசுங்கள் அவர்களிடம்.
மூன்றாம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் :
தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு வீரனிடம் இருந்து மற்ற வீரனுக்கு கடத்தப்படும் குறுந்தடி (Baton ) போல பொறுப்பு இப்போது எங்களிடம்...பரம்பரை பரம்பரையாக எங்கள் தாய் தேசத்தின் வரைபடமும் அங்கு செல்வதற்கான வழியும் எங்கள் மூளையில் பதிந்திருப்பதாய் (Imprint ) சொல்கிறீர்கள். என்னமோ ஒன்று..ஆனால் நாங்களும் பறக்கிறோம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள்.
வெற்றி!!! வெற்றி !!! வந்துவிட்டோம் எங்கள் முன்னோர்களின் தேசத்தில்.
வசந்த காலத்தில் மெக்ஸிகோவில் எங்கள் முன்னோர்களால் தொடங்கப்பட்ட பயணம் கோடைக்காலத்தில் முடிவுக்கு வருகிறது.
இன்னும் சில மாதங்களில் கோடைக்காலம் முடிந்து விடும்..நாங்களும் பலசாலி தலைமுறை அல்லர். சந்ததியை உருவாக்கி கண்மூடுகிறோம்..அடுத்த தலைமுறை கண்டிப்பாக உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
நான்காம் தலைமுறை Monarch வண்ணத்துப்பூச்சிகள் அல்லது சூப்பர் தலைமுறை (Super Generation ) :
செப்டம்பர் மாதம்..கனடாவில் ஒரு ஏரிக்கரையில் நெக்டார் உண்டு
அமர்ந்திருக்கிறேன்..
எங்கோ கேட்ட குரலாகத் தெரிகிறதா? ஆமாம் என் கொள்ளுப்பாட்டி உங்களிடம் சொல்லிச்சென்ற கொள்ளுப் பேரன் நான்தான்...என் அம்மா மற்றும் பாட்டி போல சவலைப் பிள்ளை இல்லை நான்..என் பெயர் பார்த்தே யூகித்திருப்பீர்கள் ..
சூப்பர் தலைமுறை. Super Generation !!
இதோ வந்து விட்டது இலையுதிர் காலம். கொள்ளுப் பாட்டியைப் போல் நானும் பறப்பேன் மெக்ஸிகோவுக்கு. எனக்கு முந்திய தலைமுறை போல் வழியில் செத்துப் போக மாட்டேன்.. கனடா to மெக்ஸிகோ நேரடிப் பயணம் ..3000 கிலோமீட்டர்கள்..
அதெப்படி உனக்கு மட்டும் மெக்ஸிகோ வரை செல்லும் பலம் கிடைத்தது என்று கேட்கிறீர்களா? தொடரும் ஆச்சர்யங்களில் அதுவும் ஒன்று தான். இனி கொள்ளுப் பாட்டி உங்களிடம் கேட்கச் சொன்ன கேள்விகளைக் கேட்கிறேன்..உங்களுக்கு பதில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பரிணாமம் பற்றிப் பேசும் உங்கள் தோழர்களிடம் மறக்காமல் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்..
1. முன்பு பார்த்திராத ஒரு தேசத்துக்கு எப்படி நாங்கள் செல்கிறோம்? ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எப்படி இந்த தகவல்களை பரிமாறியது?
2. மெக்ஸிகோவில் இருந்து கனடா வந்து சேர மூன்று தலைமுறை பிடித்தது..ஆனால் கனாடவில் இருந்து மெக்ஸிகோவுக்கு எப்படி ஒரே தலைமுறையைச் சார்ந்த நான் (Super Generation) பயணிக்கிறேன் ?
3. இயற்கைத் தேர்வு (Natural Selection ) என்னும் பரிணாம விதிப்படி அடுத்தடுத்த தலைமுறை தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமே. ஆனால் சூப்பர் தலைமுறைக்கு பின்னர் வந்த மூன்று தலைமுறையும் ஏன் சவலைப் பிள்ளையாய் போனது?
4. ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் இந்த நிகழ்வில் ஏன் இப்படி மூன்று தலைமுறைகளுக்கு அடுத்து வரும் ஒரு தலைமுறை சர்வ பலசாலியாய் இருக்கிறது?
5. மெக்ஸிகோ நான் வாழத் தகுதியான இடமெனினும் என் தலைமுறைகள் ஏன் கனடா நோக்கி வருகிறது? இயற்கைத் தேர்வு (Natural Selection ) என்னும் பரிணாம விதிப்படி எனக்கு உகந்த பகுதியாக மெக்ஸிகோ இருக்கும்போது நான் ஏன் கஷ்டத்தை விலை கொடுத்து வாங்குகிறேன்?
6. மில்லியன் கணக்கான ஆண்டுகள் எங்கள் மூதாதையர் இப்படி பறந்து கொண்டிருந்தாலும் எங்கள் இறக்கைகள் இன்னும் ஏன் சிறியதாகவே இருக்கிறது?
7. பரிணாம விதிப்படி நான் ஏன் குளிர் காலத்திலும் வாழுமாறு என்னை தகவமைத்துக் கொள்ளவில்லை? காலம் காலமாக நான் ஏன் இவ்வளவு தூரம் பயணித்து குளிரில் இருந்து தப்ப நினைக்கிறேன்?
8. கனடா அமெரிக்கா மெக்ஸிகோ என்று மட்டுமே நான் ஏன் சுற்றுகிறேன்? வருடம் முழுவதும் எனக்கேற்ற காலநிலை உள்ள ஒரு இடத்துக்கு செல்ல நான் ஏன் இன்னும் முயலவில்லை?
மேலதிக தகவல்கள்:
1.BBC தொலைக்காட்சியின் புகழ்பெற்ற LIFE தொடரில் இருந்து இந்த monarch வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்தல் பற்றிய அழகிய காணொளி பார்க்க
Tweet | |||||
44 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்..
மாஷா அல்லாஹ், மிக மிக மிக அருமையான பதிவு,
இறைவனின் போற்றத்தக்க விந்தைகளை நீங்கள் சொல்லிச்சென்ற விதம் அருமை.
ஸாரி இவையெல்லாம் “இயற்கையின் அதிசயம்” என்று இவற்றை ஒரு சிறு கூட்டிற்குள் அடைத்துவிட என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை.
பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
அண்ணா...
மாஷா அல்லாஹ்! சான்சே இல்ல!
சில நாளா நீண்ட பதிவுகள் பார்த்தா ஓடிடுவேன் :-) இந்த பதிவும் அப்படிதான் நெனச்சு பார்த்தேன்...படிக்க படிக்க சுவாரசியம்!
வண்ணத்துபூச்சி கேட்ட கேள்விகளெல்லாம் நச்! பதில் வந்தா :-) சேதி சொல்லி அனுப்புங்க (வரும்னு நெனைக்கிறீங்க அவ்வ்வ்)
சூப்பர் அண்ணா! தொடர்ந்து எழுதுங்க.. அருமையான நடை!
சலாம் சகோ பீர்,
வாவ்..........எக்ஸலன்ட் ஆர்டிகள்.. பரிணாமம் அது ஒரு பரிதாபம்னு நான் அடிக்கடி சொல்வது உண்டு. அதை பலர் பல முறை நிரூபித்து இருந்தாலும் இந்த பரிணாமவாதிகள் விடாப்பிடியாய் தான் பிடித்த முயலுல்லு 3 கால் என்றெ நிற்கிறார்கள்.
இதற்க்கும் அவர்கள் சில சப்பை கட்டுக்களை கட்டக்கூடும்.. ஆனாலும் நடுநிலையோடு சிந்திக்கும் மக்களுக்கு இது ஒரு அலசலாகாவே தெரியும்..
வெரி வெரி குட் வொர்க் பிரதர்.. அப்ரிசியேட்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..அருமையான பதிவுகளில் ஒன்று..
வண்ணத்துப் பூச்சி பார்வையின் ஊடாக சொல்லிய விதம் புதுமையோடு அருமை...அறியாத பல தகவல்கள்..
சமீபத்தில் படித்த பதிவுகளில் மிக ரசித்து படித்த பதிவு..
///பக்கத்து ஊருக்குப் போவதற்கே பல்வேறு போர்டுகளைப் பார்த்துப் போகும் நீங்கள், என்னால் வழி தவறாமல் 2000 மைல்கள் பறக்க முடிந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?///
சுபஹானல்லாஹ்...
எழுத்து நடை மிக இயல்பா அருமையா இருக்கு..நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:)
சலாம் சகோ.பீர் முஹம்மது
நல்லதொரு பதிவு....ஒரு பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட் என்கிற முறையிலும் டிசைனர் என்கிற முறையிலும் நமக்கு நிறங்களை பற்றிய அறிவு கொஞ்சம் உண்டு...!!!
வெவ்வேறு வண்ணங்களை கொண்டுவருவதற்கு CMYK என்கிற நான்கு நிற இங்க்களை பயன்படுத்துவோம்...சமயத்துக்கு எதிலுமே கொண்டுவர முடியாத வண்ணங்களும் உண்டு...
ஆனால் வண்ணத்து பூசிகளிலும் ,மீன்களிலும் எத்தனை எத்தனை வண்ணங்கள்..!!! இது எமது பிரிண்டிங் அறிவை சோதித்தது...அதன் மேல் உள்ள அற்புதமான டிசைன் ..இது எமது டிசைன்னிங் அறிவை வீழ்த்தியது...இது எப்படி உருவாகி இருக்க முடியும்..??? என்று பல நாள் வியந்ததுண்டு...
நிச்சயம் டிசைனர்களுக்கெல்லாம் டிசைனர் , பிரிண்டர்களுக்கெல்லாம் பிரிண்டர் உள்ளார் என்ற நிலைக்கே எம்மால் வர முடிந்தது..
சான்சே இல்ல என்ன ஒரு திறமை..!!! நிச்சயமாக அக்பர் (மிகப்பெரியவன்) என்கிற தகுதிக்கு உரியவனுக்கு என்னுடைய இயலாமையால் தலை வணங்குகிறேன்..!!!!
நன்றி !!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
செமையான போஸ்ட் பீர். எழுத்து நடை ஆபாரம். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். அதனால் இந்த பதிவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு வழக்கம்போல பரிணாமவியலாளர்களிடம் இருந்து பதில் வரப்போவதில்லை. ஆனால் knowledge என்ற முறையில் நல்ல தீனி இந்த பதிவு...
வாழ்த்துக்கள்...இறைவன் உங்கள் கல்வியறிவை மேம்படுத்தி வைப்பானாக...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Outstanding Style of Narrations....!
Liked it very very Much.....!
Expecting a lot from you Brother...!!!
அழகிய நடை. பதிவு சற்று பெரிதாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. பரிணாம குழுமத்தில் மற்றொரு புயல் வீசியிருக்கிறது. தொடருங்கள்.
ஆஹா...அற்புதம் ...அருமையான பதிவு..நன்றி
சலாம் சகோ.பீர்...
இப்படியும் ஒரு பதிவு எழுத முடியுமா..? மாஷாஅல்லாஹ் ..!
பொறாமை கொள்ளத்தக்க நடை மட்டுமல்ல..! அதில் மாபெரும் பொருள்பொதிந்த ஏகப்பட்ட உள்ள கருத்துகள்... சுபஹானல்லாஹ்...! இறைவனின் படைப்பாற்றலையும் ரப்பாக இருந்து அனைத்து உயிர்களையும் ரட்சிக்கும் அவனின் ஆற்றலையும் அழகாகவும் அற்புதமாகவும் ஆணித்தரமாகவும் இனிமையாகவும் எளிமையாகவும் சொல்லிச்செல்கிறது..! அறிந்துகொண்ட மேட்டர் எனக்கு புதுசு..!
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இதுவரை எந்த ஒரு பதிவையும் ஒரு முறை படித்து விட்டு மீண்டும் ஒரு முறை படித்தது இல்லை சகோ.பீர்.... இதுதான் எனது பதிவுலக வாழ்நாளில் முதல் முறை...! இரண்டு முறை படித்து ரசித்தேன் சகோ.பீர்..! மெய்மறந்தேன்..! இன்னும் ஒருமுறை படிக்கவா..?
மீண்டும் வாசிக்கத் தூண்டும் நடையில், விளக்கமான பதிவு. கேள்விகளுக்கான (அறிவியல் ரீதியான) விடைகளையும் தந்திருக்கலாம். அதுவும், அந்த மூன்றாவது தலைமுறை ரகசியம்.. ஆர்வத்தைக் கூட்டுகிறது.
காணொளி அருமையாக இருந்தது. இரண்டு தகவல் பக்கங்களில், விக்கிதான் அதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது.
நீண்ட பதிவு ஆனால் கொஞ்சம் கூட அலுப்பு தட்டவில்லை காரணம் எழுத்து நடையின் வசீகரம்.மாஷா அல்லாஹ்.இந்த பதிவுக்கு பரினாமவாதிகளின் பதில் இயற்கை விதி என்ற ஒரு வார்த்தையில் முடித்து விடுவார்கள்.அல்லது இதை ஆராய்ந்து உங்களுக்கு சொன்னது விஞ்ஞானிகள் தானே சப்பை கட்டு கட்டுவார்கள்.
அழகான பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் பீர்,
மாஷா அல்லாஹ். அவன் படைப்பாளன். அவனுடைய படைப்பின் ரகசியங்கள் குறித்த செய்திகள் படிக்கையில் சஜ்தா செய்து அவனை இறைவா நீயே தூயவன் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
ஏற்கெனவே சாலமன் மீன்கள் குறித்த ஒரு டாக்குமெண்டரி பார்த்து நான் வியந்திருக்கிறேன். அதே போன்று இந்த பதிவும் டாக்குமெண்டரி ஆக்க கூடிய திறமையான எழுத்துக்களுடன் வலம் வந்திருகிறது. யாராவது இது குறித்து தமிழில் குறும்படம் எடுத்தால் உங்களுடைய இந்த வரிகளை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு சிறப்பான எழுத்து நடை.
ஏற்கெனவே தமிழ் இணைய சூழலில் பரிணாமத்தை படு குழியில் தள்ளியதில் எதிர்க்குரல் ஆஷிக் முன்னிலை வகிக்க படுகுழியில் இருக்கும் பரிணாமத்திற்கு கூடுதலாக அடி கொடுத்திருக்கிறது இந்த பதிவு. பகிர்விற்கு நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்......
அல்ஹம்துலில்லாஹ்.....மிகவும் சுவரஸ்யமான பதிவு. படிக்க படிக்க ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இது வரை எந்த பரிணாம பதிவும் படித்தது இல்லை. முதல் முறை படித்தேன். வியந்தேன். எழுத்து நடை மிகவும் அருமை. இன்ஷா அல்லாஹ் தொடருங்கள்.
Really Awesome bro....
maasha allah!
nalla thakavalkal...
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான வாசிப்பு அனுபவம்
உயர்ரக நடை டக்குன்னு சாதாரண நடை அப்புறம் மறுபடியும் உயர் ரகம் இப்படி பலவண்ணங்களில் அமைந்திருக்கிறது இப்பதிவு வாழ்த்துகள் சகோ
அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,
கனடாக்கும், மெக்ஸிக்கோவிற்கும் இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு பறந்ததினால்தான் உடல்நிலை சரியில்லாமல் போனதோ என்னவோ??? அந்த நேரத்திலும் பதிவை சரி பார்த்து போட்டிருக்கீங்கன்னா என்ன சொல்ல... முஹமத் ஆஷிக் பாய் சொல்வது போல் பொறாமையாய்த்தான் இருக்கிறது.
இந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றியும், இதே போல் ஆஸ்திரேலியாவின் அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு இதே போல் புலம் பெயரும் சிவப்பு நண்டுக்களைப் பற்றியும் சில வருடங்கள் முன்பு டாக்டர்.ஹாரூன் யஹ்யாவின் ஒலி/ஒளி விளக்கப்படமொன்றில் பார்த்தேன். அப்பொழுது பார்த்தபோது எப்படி ஒவ்வொரு நொடியும், மாஷா அல்லாஹ், ச்ச...எப்படி.... ப்ச்....சான்ஸே இல்லை.... என மாற்றி மாற்றிப் பேசி பரவசமடைந்தேனோ.....அதே உணர்வை அப்படியே இந்தக் கட்டுரையை ....ஸாரி..... மூன்று தலைமுறை பட்டுப்பூச்சிக்களின் வாய்மொழி மூலம் உணர்ந்தேன். மிக மிக அருமையான நடை. Keep it up ! :)
இந்தியாவின் எதிர்க்குரலுக்கு தோதாய் அமெரிக்காவிலிருந்தும் ஒரு எதிர்க்குரலா.... பாவம் பாய் அவிங்க :)) பார்த்து செய்ங்க.
விட்டுப்போகவே மனமில்லை.... இன்னும் என்ன எழுதுவதென்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன்... டெம்பிளேட்டை உங்க கட்டுரைக்கு ஏற்றபடி மாத்திடுங்க இன்ஷா அல்லாஹ்.... கண்டிப்பா இதை மறுபடி மறுபடி படிக்க வருவேன்... பகிர்வேன்.... ஜஸாக்கல்லாஹு க்ஹைர். :))
வஸ் ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. பீர் அருமையான பதிவு... படிக்க படிக்க ரொம்ப சந்தஷோமாக இருந்தது... படித்துவிட்டு கடைசியில் பார்த்த என்னையும் அறியமால் இவ்வளவு பெரிய பதிவை படித்துள்ளேன். உங்களுக்குல் இவ்வளவு திறமை இருப்பதை இன்றே நான் அறிகிறேன். அல்லாஹ் உங்களின் அறிவை மென்மேலும் விசாலமாக்குவானகா... வாழ்த்துக்கள் சகோ.
டர்வீன் சித்தபடி அந்த சூப்பர் ஜெனரேஷன் 1001 கிலோமீட்டர் தானே பயணம் செய்யவேண்டும்... அனால் அது எப்படி 3000 கிலோமீட்டர் பயணம் செய்ய முடிகிறது... வாவ்! இதற்கு டர்வீன் ஜெனரேஷகளிடம் விடை இருக்காது. கேட்டால் விரண்ணா ஏரியில் படிமத்தை தேடி கொண்டு இருக்கிறோம் என்ற சொல்லுவார்கள். எதோ Monarch தொந்தரவு செய்யம்மால் இருந்தால் சரி.
மிக அருமையான பதிவு.
வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாட்டில் இறைவனின் கிருபை ஒளிந்திருப்பதை வெளிக்கொண்டு வந்துவிட்டீர்கள்.
இறைவனின் படைப்பின் உன்னத ஆற்றலை உதாரணமாக காட்ட விலங்குகள்,பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவற்றின் செயல்பாட்டினை வைத்து தான் சொல்ல முடியும் மனிதனின் செயல்பாட்டினை வைத்து இறைவன் உள்ளான் என காட்ட முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ளீர்கள்.
சுற்றிலும் மாற்று மத நாடுகள், மக்கள் தொகை எண்ணிக்கை,.பண பலம் ,பெட்ரோலிய வளம் ஆனால் உலகெங்கும் சிதறி கிடந்த யூதர்கள் இச்ரேலை நோக்கி குவிந்து ஒரு தேசத்தினை கட்டமைத்து யாராலும் வீழ்த்த முடியாமல் வாழ்வதை வைத்தும் இறைவனின் படைப்பின் சிறப்பினை நீங்கள் விளக்க முயலலாம் :-))
கண்டிப்பாக டார்வின் தியரிப்படி இஸ்ரேலோ, காசாவோ உருவாகி இருக்காது சண்டை போட்டுக்கொண்டிருக்காது,ம் எல்லாம் இறைவனின் செயலாகத்தான் இருக்கும், இஸ்ரேலை வீழ்த்த முடியாமல் இருப்பதற்கும் காரணம் உங்களின் ஏக இறைவன் இஸ்ரேலுக்கு அத்தகைய ஆற்றலை வழங்கியிருக்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. அருமை குட்டி ஆவணப்படம் பார்த்தது போல் உள்ளது. அல்லாஹ் உங்களின் கல்வி அறிவை அதிகப்படுத்தட்டும்.
ஒரு பொய்யை உண்மையாக்க ஆயிரம் பொய்களை அவிழ்த்துவிடும் பொய் பகுத்தரிவாலர்களிடம் ஒரு கேள்விக்கே உண்மை இருக்காது இதுல பல தலைமுறை சம்பந்தம்மா கேள்வியை கேட்டால்...
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? .ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். [அல் குர்ஆன் 24 :41)
"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற [அறிவு படைத்த] இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான். [அல் குர்ஆன்6:38,39]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Monarch க்கு இன்னும் பல தலைமுறைகள் இருந்திருக்குமானால் இன்னும் கூடவா படிச்சிட்டே இருக்கலாம் இதை.. :) மாஷா அல்லாஹ்!! தெவிட்டாத சுவையுடன் கூடிய, இறைவனின் படைப்பை நினைத்து மென்மேலும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான பதிவு! இதுபோன்ற மேலும் பல ஆக்கங்களை எதிர்ப்பார்க்கிறோம்.
Gregor Mendel, who is known as the "father of modern genetics", was inspired by both his professors at the University of Olomouc (i.e. Friedrich Franz & Johann Karl Nestler) and his colleagues at the monastery (e.g., Franz Diebl) to study variation in plants, and he conducted his study in the monastery's 2
hectares (4.9 acres) experimental garden, [10] which was originally planted by Napp in 1830. [8] Between 1856 and 1863 Mendel cultivated and tested some 29,000 pea plants (i.e., Pisum sativum). This study showed that one in four pea plants had purebred recessive alleles, two out of four were hybrid and one out of four were purebred dominant. His experiments led him to make two generalizations, the Law of Segregation and the Law of Independent Assortment, which later became known as Mendel's Laws of Inheritance.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..[பீர் அண்ணா]
படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்கள் கண்டு
வாயடைத்துபோன நான்
வண்ணத்துப் பூச்சியாரின்
வரலாறுகண்டு
விழியசையாது இருக்கிறேன்..
அருமையிலும் அருமை..எழுத்துநடை அற்புதம்
வாழ்த்துகளும் பாராட்டுகளும் அண்ணா..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா... அல்லாஹ்... வண்ணத்து பூச்சியிடமே பேசியது போன்ற ஒரு பிரமிப்பு.... நல்ல வேல முன்னமே டார்வின் செத்துட்டாரு..
பரிணாமம் சொதப்பிய விசயங்களில் இதுவும் ஒன்று...
அட மத்தத விடுங்க... இந்த மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளின் வர்ணங்களை பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ்!! எவ்வளவு நேர்த்தியான வண்ண சிதறல்களின் வடிவமைப்பு. பரிணாம அடிப்படையில்(?) அதன் இறக்கையின் நிறங்கள் வெவ்வெறாய் அழகுடன் இருப்பதென்பது தேவையில்லாத ஓன்று. ஏனெனில் பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம் என்றால் எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்தின் மூலமாக எந்த உயிர் வாழும் தேவையும் அப்பூச்சிகளுக்கு ஏற்படவே இல்லை. அப்படி வர்ண தேவைகள் அழகுக்காக தான் என்றால் அதற்கு பரிணாமத்திற்கு இங்கே வேலையே இல்லையே...?
பொறாமைக்கொள்ள வைக்கும் பதிவு! பரிணாமத்தை ஆதாரிப்பவருக்கும்... - எதிர்ப்பவருக்கும்....
அமெரிக்காவின் எதிர்க்குரலுக்கும் எம் ஆதவுக்குரல்கள்... என்றும் உண்டு இன்ஷா அல்லாஹ்...
உங்கள் சகோதரன்
குலாம்.
பரிணாமவியலை வண்ணத்து பூச்சி எந்த இடத்தில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை விளக்கவே இல்லையே சோதரரே. அய்யோ அய்யோ.
என்ன தான் கத்திக் குளறி உருண்டு புரண்டு பரிணாமவியல் பொய் பொய் எனத் தூற்றினாலும். ஒவ்வொரு விடயமும் பலரின் பல்வேறு பரிசோதனைகள், ஆய்வுகள், விவாதங்கள் என்பதன் மூலமாகவே நிரூபித்து பின்னர் கல்வி, அறிவியல் ஆய்வுகளில் கொண்டு வரப்படுகின்றது சகோ.
ரூம் போட்டு யோசித்து இதற்கும் அதற்கும் முடிச்சுப் போட்டு அது பொய் என சொன்னால் பொய்யாகிவிடாது. எந்தெந்த வகையில் பரிணாமவியல், வண்ணத்துப் பூச்சியின் இடப்பெயர்பு பொய்யாகி யுள்ளது என்பதை விரிவான தரவுகளாய் முன் வைக்க வேண்டும்.
சொல்லப் போனால் இந்த வண்ணத்து பூச்சியின் இடப்பெயர்வு பரிணாமவியலை பல இடங்களில் நிரூபித்துள்ளன.
சந்தேகம் இருந்தால் கூகிளாண்டவரிடம் முறையிடுங்கள், பதில் கிட்டும். வெரி ஈஸி .. ! அவ்வ்வ்வ்
சகோ வவ்வால்,
பதிவின் மையக்கருத்தை விட்டு ஏதேதோ சொல்லி இருக்கிறீர்கள். பதிவு இஸ்ரேல் சம்பந்தப்பட்டது அல்ல. திருப்பி பதிவை படித்து சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும்.
அலைக்குமுஸ்ஸலாம் குலாம்,
நீங்கள் சொன்னது சரியே. வண்ணத்துப்பூச்சியின் இறக்கையின் நிறங்கள் மற்றும் வடிவமைப்பில் பரிணாமம் தோற்றுப்போகும் பல விஷயங்கள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் பகிர்கிறேன்.
சகோ இக்பால் ,
//பரிணாமவியலை வண்ணத்து பூச்சி எந்த இடத்தில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை விளக்கவே இல்லையே சோதரரே. அய்யோ அய்யோ.//
நீங்கள் தலைப்பு தவிர பதிவில் எதுவுமே படிக்கவில்லை என்பது தெரிகிறது :)
//சொல்லப் போனால் இந்த வண்ணத்து பூச்சியின் இடப்பெயர்வு பரிணாமவியலை பல இடங்களில் நிரூபித்துள்ளன.//
எங்கே என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் நன்றாக இருக்கும் :)
//சந்தேகம் இருந்தால் கூகிளாண்டவரிடம் முறையிடுங்கள், பதில் கிட்டும். வெரி ஈஸி .. ! அவ்வ்வ்வ் //
சாரி சகோ. அவ்வளவு ஈசி இல்லை. கூகிள் சொல்வதில் இருந்து பல இடங்களில் கிராஸ் செக் செய்து தான் தகவல்கள் பரிமாறுகிறேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள். தவறில்லாமல் எழுதலாம் :)
அலைக்குமுஸ்ஸலாம் சகோ மரூப் ,
கவிதை நடையில் பின்னூட்டம் செம செம :)
அலைக்குமுஸ்ஸலாம் சகோ செய்யத் ,
//ஸாரி இவையெல்லாம் “இயற்கையின் அதிசயம்” என்று இவற்றை ஒரு சிறு கூட்டிற்குள் அடைத்துவிட என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை.//
What a wonderful punch !!Loving it brother !!
//அண்ணா...
மாஷா அல்லாஹ்! சான்சே இல்ல!
சில நாளா நீண்ட பதிவுகள் பார்த்தா ஓடிடுவேன் :-) இந்த பதிவும் அப்படிதான் நெனச்சு பார்த்தேன்...படிக்க படிக்க சுவாரசியம்!//
ஆமினா சிஸ்டர்,
இனிமே பெரிய பெரிய பதிவா எழுதி கொலையா கொல்லுவேன் :)
அலைக்குமுஸ்ஸலாம் சகோ ஆயிஷா,
//சுபஹானல்லாஹ்...
எழுத்து நடை மிக இயல்பா அருமையா இருக்கு..நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:)//
ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ சிராஜ் ,
ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ எதிர்க்குரல் ஆஷிக்,
ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ நாகூர் மீரான்,
வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் உண்மையில் மிகப் பெரிய ஆச்சரியம்.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ ஷேய்க் தாவுத்,
நீங்கள் சொன்ன சால்மன் மீன்கள் குறித்தான படம் பார்த்திருக்கிறேன். அதுவும் பெரிய ஆச்சரியமான இடம்பெயர்தலில் ஓன்று தான். இன்ஷா அல்லாஹ் எழுதணும்.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ சிட்டிசன் ஆஷிக்,
உங்களைப் போன்ற சீனியர் பதிவர்களின் வார்த்தைகள் செமையாக டானிக் குடித்தது போல் இருக்கிறது. ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ அன்னு ,
நீங்கள் சொன்ன கிறிஸ்மஸ் தீவு இடம்பெயர்தல் பற்றிய நேஷனல் geographic ஆவணப்படம் பார்த்திருக்கிறேன். மாஷா அல்லாஹ் . இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது..இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்.
அலைக்குமுஸ்ஸலாம் சகோ முபி ஜன்னா ,
//இது வரை எந்த பரிணாம பதிவும் படித்தது இல்லை.//
எதிர்க்குரல் படியுங்கள் இன்ஷா அல்லாஹ் .
அலைக்குமுஸ்ஸலாம் சகோ அஸ்மா , முஜாஹிட் , நிசாம் ,ஹைதர் காக்கா ,
வருகைக்கும், கருத்துக்கும், ஊக்கமளித்தமைக்கும் நன்றி :)
என்ன பாஸ், எல்லாவற்றுக்கும் என்னையே பதில் எழுத வைக்கின்றீர்கள். எனது ஆராய்ச்சி மேற்படிப்பில் முதல் செமஸ்டரிலேயே இந்த வண்ணத்துப் பூச்சியைத் தான் படித்தோம். அது மட்டுமில்லை, மரபியல் சங்கதிகள் எவ்வாறு பரிணாமத்தில் மரபுக் கூற்றில் பதிந்துள்ளது என்பது தான் அந்த பாடமே. ரொம்ப ஈஸியான வேலைக் கொடுத்துவிட்டீர்கள் .. சரி .. அதனையும் எழுதுவோம். நிலுவையில் பல பதிவுகள் நிற்கின்றன. இருந்த போதும் உங்கள் அன்பு வேண்டுகோளால் இதனை எழுதுகின்றேன்
தவறாமல் வந்து வாசிக்கவும் .
அஸ்ஸலாமு அலைக்கும் சேட்டா
மாஷா அல்லாஹ் பதிவா இது ?? அப்பப்பா.... பட்டாம்பூச்சி உலகத்துக்கே நேரடியா கூட்டிகிட்டு போயிட்டிங்களே...!! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சான்சே இல்ல...!!
அருமையான எழுத்து நடை சேட்டா... மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது... ! இப்படி எல்லாம் கூட பதிவு எழுத முடியுமான்னு கொஞ்சூண்டு
பொறாமையா கூட இருக்கு..!
இறைவனின் படைப்பில் தான் எத்தனை அற்புதம்...! சுப்ஹானல்லாஹ்..!
இதுவரை அறியாத தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி :)
Good narration. I read your article as David Attenborough did. I loved reading it in tamil finally. Here is the maps link for their Migration
https://www.google.com/search?q=monarch+butterfly+migration+route&hl=en&client=safari&tbo=d&source=lnms&tbm=isch&sa=X&ei=JpexUK22MYXE0QHcjIDoDQ&ved=0CAkQ_AUoAQ&biw=768&bih=928#biv=i|6;d|wrBSc4TpJmEzSM:
அருண்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
அருமையான பதிவு சகோ
பீர் முகமது: பரிணாமம் தப்புனு நிரூபிச்சு என்னத்தை சாதிக்கப் போறீங்கணு தெரியலை எனக்கு. ஏன் பரிணாமம் தப்பு, அதை நம்பாதே! னு மெனக்கெடுறீங்க, பாவம்!
***பரிணாம விதிப்படி நான் ஏன் குளிர் காலத்திலும் வாழுமாறு என்னை தகவமைத்துக் கொள்ளவில்லை? காலம் காலமாக நான் ஏன் இவ்வளவு தூரம் பயணித்து குளிரில் இருந்து தப்ப நினைக்கிறேன்? ****
பரிணாம விதினா என்ன?
யார் அதை உருவாக்கியது?
மேலே கூறப்பட்ட பரிணாம விதி எந்த விதி??
அப்போ பரிணாமவிதிப்படி, மீன் நடக்கணும், ஓடணும், டாண்ஸ் ஆடணுமா?
ஏன்ப்பா சும்மா போட்டுக்கிட்டு...
Post a Comment