சல்மான் கான் : கான் அகாடமி : சத்தமின்றி ஒரு மாபெரும் புரட்சி !!!

அஸ்ஸலாமு அலைக்கும்,


சல்மான் கான்..நமக்குத் தெரிந்த இந்திய நடிகர் அல்ல... இவர் அமெரிக்கர்...இவரது பெற்றோர்கள் வங்காளத்திலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர்கள்...உலகின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்றான MIT Massachusetts Institute of Technology  இல்  மூன்று பட்டப்படிப்பும் பின்னர் இன்னொரு பிரபல பல்கலைக்கழகமான ஹார்வர்ட் இல் பொருளாதார மேலாண்மையில் மேற்படிப்பும்   படித்தவர்...MBA படித்தவர்களுக்கு அமெரிக்காவில் dream job லட்சங்கள் சம்பளமாகக் கிடைக்கும் HEDGE fund analyst வேலை...அந்த  வேலையில்  சேர்ந்தார் சல்மான் கான்..

தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் இவருக்கு ஒரு பொழுதுபோக்கு இருந்தது...அது அமெரிக்காவின் பிறிதொரு பகுதியில் பள்ளியில் படிக்கும் தனது cousin குட்டிப் பெண் நாதியா வுக்கு இன்டர்நெட் வழி கணிதம் சொல்லித்தரும் வேலை தான் அது... பின்னாளில் வேறு சில cousin  களும் சேர்ந்து கொள்ள நல்ல பொழுதுபோக்காக இருந்தது சல்மான்னுக்கு...

சில நாட்கள் வேலைப் பளு அதிகமான போது அவரால்  சரியான நேரத்தில் இன்டர்நெட்டில் பாடம் நடத்த முடியவில்லை...பிரச்னையைத் தீர்க்க அவர் ஒரு வழி கண்டுபிடித்தார்...சிம்பிள்...பாடத்தை ரெகார்ட் செய்து youtube தளத்தில் வெளியிட்டு அதன் சுட்டியை அந்தப் பிள்ளைகளுக்கு கொடுத்தார்...

ஒரு பெரிய ஆச்சரியம் அவருக்கு காத்திருந்தது. சல்மான் நேரடியாகப் பாடம் நடத்துவதை விட youtube வழி பாடம் நடத்துவது குழந்தைகளுக்குப்  பிடித்திருந்தது... ஏனென்று ஆராய்ந்து பார்த்தால் அந்தக் குழந்தைகளுக்கு அது தான் வசதியாய் இருந்தது..பாடம் நடத்துபவரை தங்கள் இஷ்டப்படி அவர்களால் நிறுத்த முடிந்தது...ஆடிக்கொண்டிருக்கும் வீடியோ கேம் முடிந்த பின்னர் தான் கணிதப் பாடம் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் கூட அவர்களால் படிக்க முடிந்தது...ஒரு நாள் பாடத்தை மறுநாளும் படிக்கலாம்...சந்தேகம் வந்தால் திருப்பித் திருப்பி கேக்கலாம்..இப்படி எத்தனையோ நன்மைகள்...

ஒரு வகையில் சல்மானுக்கும் கொஞ்சம் நிம்மதி தான்...அவருக்குப் பிடித்த வேகத்தில் நினைத்த நேரத்தில் அவருக்கு நேரம் கிடைக்கும்போது பாடத்தை நடத்தி youtube தளத்தில் போட்டு சுட்டியை கொடுத்தால் போதும் :) :) வேலை முடிந்தது :)

பாடம் நடத்துவது கூட ரொம்ப சாதாரணமான டெக்னிக் தான்...ஒரு கரும்பலகையில் வெவ்வேறு நிறத்தில் சாக்பீஸ் வைத்து வரைந்தால் எப்படி இருக்கும்..அது தான் பாடத்துக்கான் வீடியோ :)

பொதுவான விஷயம் தானே அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று காணொளிகளை பிரைவேட் ஆக்காமல் எல்லாரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக் ஆகவே youtube இல்  ஷேர் செய்திருந்தார்... நாட்கள் செல்லச் செல்ல அவரது உறவினர்களின் குழந்தைகளைத் தவிர வேறு பலரும் அதனை பயன்படுத்த  ஆரம்பித்தனர்...   அந்த வீடியோக்களின் கீழே அதனை பயன்படுத்துபவர்கள் கொடுத்திருந்த கமெண்ட்ஸ் அவரை மென்மேலும் உற்சாகமூட்டியது...

சாம்பிளுக்கு சில  :

ஒரு தாயார் இப்படி எழுதியிருக்கிறார்.
"autism நோய் இருக்கும் எனது பன்னிரண்டு வயது மகனுக்கு கணிதப் பாடங்கள் கொஞ்சம் கூடப் புரிவதே இல்லை..உங்கள் வீடியோ மூலம் அவனை கவனிக்கச் செய்து அவனால் இப்போது கணிதப் பாடங்களை சிறப்பாக கற்க முடிகிறது...உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..."

இன்னொரு மாணவர்:
 "முதல் முறை ஒரு கணித வகுப்பை புன்னகையுடன் என்னால் கவனிக்க முடிந்தது...."

உலகம் முழுவதும் தொழில்நுட்பம் முழுமையாகச் சென்றடையாத நாடுகளில் CISCO நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி அங்குள்ள அநாதை நிலையங்களில்  இணைய தொடர்பு வசதிகளை செய்து கொடுத்தது. அப்படி இணையத் தொடர்பு கொடுக்கப்பட்ட மங்கோலியா நாட்டில் உள்ள ஒரு அநாதை நிலையத்தில் இருந்த zaaya என்ற பதினாறு வயது சிறுமி KHAN ACADEMY பாடங்களைக் கற்றுத் தேறினார். இன்று கான் அகாடமி உலகின் மற்ற மொழிகளில் அதன் பாடங்களை எடுத்துச் செல்லும் முயற்சியில் Zaaya வும் ஒருவர். அவர் தான் மங்கோலியா மொழியில் பாடங்களை மொழிபெயர்க்கும் chief translator :) .மாஷா அல்லாஹ்     

வாவ்...சல்மானால்  நம்பவே முடியவில்லை...பாடங்கள நிறைய நடத்தி வீடியோ வாக மாற்றி youtube  தளத்தில் போட்டுக் கொண்டே வந்தார்..உலகம் முழுவதும் அவரது வீடியோ வுக்கு பெருத்த ஆதரவு திரண்டது... லட்சங்களை அள்ளித்  தந்த  கனவு வேலையே ராஜினாமா செய்தார்..முழு நேரமும் இதனைச் செய்ய ஆரம்பித்தார்... Khan academy பிறந்தது !!!  

ஒரு நிறுவனம் போன்று இதனை மாற்றி இன்னும் கொஞ்ச பேரை வேலைக்கு சேர்த்தார். அவர்களை வைத்து இதனை மேம்படுத்தும் சில மென்பொருட்கள் சிலவற்றை செய்தார்... சில அரசு சாரா நிறுவனங்கள்  நிதியுதவி அளித்தன...உலகின் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் கூட கொஞ்சம் நிதி அளித்தார்...மக்களுக்கு பயன்படும் சிறந்த ப்ராஜெக்ட் களுக்கான போட்டியை google நிறுவனம் நடத்தியபோது கான் அகாடமி போட்டியில் ஜெயித்தது...இந்த நிதி உதவிகளை  வைத்து தனக்கும் தன்னுடன் இருந்த குழுவுக்கும் சம்பளம் எடுத்துகொண்டார்.   

இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் KHAN academy யை பயன்படுத்துகிறார்கள்...

  http://www.youtube.com/user/khanacademy  என்ற அவரது youtube சேனல் மூவாயிரத்துக்கும் அதிகமான வீடியோக்களை   கொண்டுள்ளது... தளத்துக்கான மொத்த ஹிட்ஸ் இருபது கோடியை நெருங்குகிறது (நான் இந்தப் பதிவை இரண்டு வாரங்களுக்கு முன்னாள் எழுத ஆரம்பிக்கும்போது பதினெட்டு கோடி :))...இது தவிர இந்த வீடியோக்களை இங்கிருந்து copy செய்து பலரும் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்...அனைத்துப் பாடங்களும் இலவசம் என்பதால்...

சமீபத்தில் அமெரிக்காவின் சில பள்ளிக் கூடங்கள் khan acdemy யின் பாடங்களை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கத் துவங்க இது இன்னொரு பரிணாமம் எடுத்தது...   http://www.khanacademy.org/ என்ற அவரது தளத்தில் நீங்கள் register செய்து நீங்களே ஆசிரியராக இருந்து மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்...அவர்களின் கல்வி முன்னேற்றத்தை நீங்கள் கண்காணிக்கலாம்... graph போட்டு அவர்களின் தரத்தை khan academy யின் மென்பொருள் உங்களுக்குச் சொல்லும்...எந்த மாணவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை காலையில் வகுப்புக்குப்  போகும் முன் தெரிந்து கொள்ளும் ஆசிரியர் பாடத்தைக் கற்ற மாணவனையும் புரியாமல் இருக்கும் மாணவனையும் சேர்த்து உக்கார வைத்து அவர்களுக்கிடையே சொல்லிக் கொடுக்க வைக்கிறார்... 

அப்படியெனில் ஆசிரியருக்கு என்ன வேலை? பாடம் khan academy யில் இருக்கும்போது...   

பள்ளியில் விருப்பமில்லாமல் பாடம் கற்பது இப்போது இல்லை..வீட்டிலேயே ஜாலியாக பாடம் கற்கலாம்...நிறுத்தி நிறுத்தி தமக்குப் பிடித்த வேகத்தில் , திரும்பத் திரும்ப கேட்டு பாடத்தை கற்கும் மாணவர்கள் முன்பு வீட்டில் மூக்கு சீந்திக் கொண்டே செய்யும் பாழாய்ப் போன homework ஐ இப்போது பள்ளியில் செய்கிறார்கள்... தலைகீழ் மாற்றம் என்பது இது தானா?

பள்ளிக்  குழந்தைகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...நீங்கள் என்ன செய்யலாம்:

1 . உங்களுக்கு சந்தேகமான பாடங்களின் காணொளிகளை திரும்பத் திரும்ப பார்த்து கற்றுக் கொள்ளலாம்...நிறைய பாடங்கள் பத்து நிமிட நேரம் தான் ஓடும் ..ஒரு நாள் ஒரு வீடியோ வைத்து பார்த்தால் கூட உங்களால் நிறைய கற்றுக் கொள்ளமுடியும்...

2 . உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு (பள்ளி முதல் கல்லூரி வரை ) இதனை அறிமுகப் படுத்தலாம்... பாடங்களை நீங்கள் கற்று அவர்களுக்குச் சொல்லித் தரலாம்...

3 .நேரம் இருப்பவர்கள் இதில் ஆசிரியராக சேர்ந்து மற்ற குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம்...

4 . பல்வேறு மொழிகளில் khanacademy பாடங்கள் மொழிபெயர்க்கப்டுகிறது...ஆங்கில வீடியோவில்  subtitle சேர்த்து வெளியிடப்படுகிறது...தமிழில் முடிந்தால் வெளியிடலாம்...

5 .இதனை  பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு குழுவாக  உலகின் எல்லா நாடுகளிலும் செயல்படுகிறார்கள்...உங்கள் பகுதியில் எப்போது மீட்டிங் என்று பார்த்து அதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்...சென்னை யில் நடக்கும் சந்திப்புகள் பற்றி இங்கே பாருங்கள் http://www.meetup.com/khanacademy/Chennai-IN/


இது ஒரு  புதிய உலகம்..New world Order .. யாரும் எதனை வேண்டுமானாலும் கற்கலாம்... மிக எளிதாக..அதுவும் வீட்டில் இருந்தே... "The world is Flat " என்று thomas friedman எழுதிய புத்தகத் தலைப்பு தான் நினைவு வருகிறது...உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க நீங்களும் கற்று அவர்களுக்கும் உதவுங்கள்...இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் !!!  
     


இன்னும் சில தகவல்கள் :

1 . பாடங்களின் காணொளிகள் பகிரப்படும் இவரது youtube சேனல்

2 .இவரது நிறுவனத்தின் வலைத்தள முகவரி
http://www.khanacademy.org/

3 . பதினெட்டு லட்சம் பேரால் இதுவரை பார்க்கப்பட்டுள்ள சல்மான் கான் TED நிகழ்ச்சியில் கர கோஷங்களுக்கிடையே நிகழ்த்திய உரை. பேச்சு முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி standing ovation கொடுப்பதை நீங்கள் கடைசியில் பார்க்கலாம்.


4 . (சென்னையில் நடக்கும் Khanacademy சந்திப்புகள்  )


5. " வெகு அரிதாக உலகின் மாபெரும் புரட்சிகளை ஏற்ப்படுத்திய மனிதர்களை நீங்கள் நேரில் கண்டிருப்பீர்கள்.அப்படி உங்களால் நேரில் கண்டு பேச முடிந்த ஒரு நபராக சல்மான் கான் நிச்சயம் இருப்பார் "என்ற அறிமுக உரையுடன் கூகிள் நிறுவனத்தின் தலைவர் eric  schimdt சல்மான் கானுடன்  உரையாடும் காணொளி


6. The One World Schoolhouse: Education Reimagined என்ற தலைப்பில் இவரது புத்தகம் சென்ற மாதம் வெளியானது. அதிலிருந்து கொஞ்சம் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போதே நான் ஆர்வமாக தேடியது ஒன்றைத்தான். அது இவர் முதலில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த cousin நாதியா இப்போது என்ன செய்கிறார் என்று. அம்மிணி பெரிய ஆள் ஆகி டாக்டருக்கு படிக்கிராகளாம் :)

23 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

மாஷா அல்லாஹ்!, அருமையான பணி பற்றிய அருமையான ஆக்கம். பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

Admin said...

நல்ல பகிர்வு. ஆச்சர்யமான செய்தி.

தகவல்: இருபது கோடி பார்வைகளை தாண்டிவிட்டது...!

Jayadev Das said...

இந்த வீடியோக்களை YouTube ல் பல முறை பார்த்திருக்கிறேன், இந்தத் தகவல்கள் புதிது நன்றி.

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.பீர் முஹம்மது,

கடமையைச் செய்- பலனை எதிர்பார்கக்காதே என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் சல்மான் கான்.

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரா.

suvanappiriyan said...

சலாம்!

சல்மான் கானுக்கு ஒரு சல்யூட். இதனால் பலர் இன்று பலன் அடைகின்றனர்.

சிராஜ் said...

சகோ பீர்,

மாஷா அல்லாஹ்... நான் சமீபத்தில் படித்ததிலே அருமையான கட்டுரை... இதை நிறைய பேருக்கு கொண்டு செல்ல வேண்டும்..கல்வி இன்றைய கட்டாய தேவை.... அதற்க்கான ஏற்பாட்டை செய்கிறோம், இன்ஷா அல்லாஹ்... குட் வொர்க்...

Peer Mohamed said...

//இந்த வீடியோக்களை YouTube ல் பல முறை பார்த்திருக்கிறேன், இந்தத் தகவல்கள் புதிது நன்றி. //

Thank you for visiting brother Jayadev Das

Peer Mohamed said...

Wa alaikumussalam brothers syed,Jafarullah,suvanapriyan and Siraj !!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

SALAAM Bro.Peer,

MaashaAllaah..!
ONE of the GREAT ARTICLE i have EVER READ..!

Jazaakkallaahu khair bro.Peer.
Wonderful presentation, with Clean & Clear flow..! Extraordinary effort..! Marvelous..!

InshaAllaah, i'll use utilize this opportunity and spread this as much as possible to the needy people..! Thanks for a great post Bro.Peer Mohamed.

Ayushabegum said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மாஷா அல்லாஹ்..நல்லதொரு பதிவு சகோ..

பதிவுகள் தெரியும்..ஆனால் பதிய காரணமானவரைத் தெரியாது..

அறிய படுத்தியதற்கு நன்றி சகோ..

சல்மான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்..
எவ்வளவு உன்னதமான பணி அவருடையது..

இறைவன் அவரின் அனைத்து நல்ல செயல்களுக்கும் உதவி செய்வானாக..ஆமீன்..

Aashiq Ahamed said...

வ அலைக்கும் சலாம்,

செமையான போஸ்ட். மாஷா அல்லாஹ். கான் அகடமி குறித்து ஒரு வருடத்திற்கு முன்பாக படித்திருக்கின்றேன். மிக அற்புதமான புரட்சி அவர்கள் செய்துக்கொண்டிருப்பது. எதிர்காலத்தில் இருந்து வரலாற்றை உற்றுக்நோக்கும் போது கான் அகடமியின் பெயர் நிச்சயம் நட்சத்திரங்களில் ஒன்றாக மின்னிக்கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ்.

உங்கள் கல்வி அறிவை இறைவன் மென்மேலும் அதிகரித்து வைப்பானாக...

வஸ்ஸலாம்,

Rabbani said...

Tramendous job brothet

இப்னு அப்துல் ரஜாக் said...

Maasha Allah

Peer Mohamed said...

Wa alaikkumussalaam citizen,

So many words and heaps of praise. All thanks to allah.. Will try to keep this momentum. Thanks a lot for visiting and commenting !!

Peer Mohamed said...

Waalaikkumussalam,

Thanks so much sister ayusha, brother rabbani and brother ara ala

Peer Mohamed said...

Thank you so much brother Aashiq. Thanks a lot for the constant encouragement !!

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தெரிந்த விஷயமாக ( கொஞ்சமா )இருந்தாலும் அழகாக தெளிந்த நடையில் விளக்கியிருப்பது அருமை .

Anonymous said...

கான் அகாடமி ஆமோதிக்கும் பரிணாமவியல் கல்வியை சொல்லாமல் விட்டதேனோ !

Aashiq Ahamed said...

//கான் அகாடமி ஆமோதிக்கும் பரிணாமவியல் கல்வியை சொல்லாமல் விட்டதேனோ !///

@ பீர் முஹம்மது, இது நல்லா இருக்குல்ல...கணிதத்தில் ஆரம்பித்து பிறகு எல்லா துறைகளுக்கும் இவர்களது பாடம் பரவியிருக்கு. பல்வேறு பாடங்களில் பரிணாமமும் ஒரு பகுதிதானே. கல்விப்புரட்சி என்று பொதுவாக சொல்லிவிட்ட பிறகு, இப்படி தனி தனியா வேற சொல்லனுமா?

ஓகே. நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். சல்மான் கான் ஆமோதிக்கும் 'கடவுள் தான் அனைத்திற்கும் காரணம்" என்ற கருத்தை பதிவில் சொல்லாமல் விட்டதேனோ !

:-) :-) :-)

zafarRahmani said...

When Salman khan meet the president of any state,
He can introduce him self:
Mr.President , My name is Khan, I am the Educationist!!

Peer Mohamed said...

//கான் அகாடமி ஆமோதிக்கும் பரிணாமவியல் கல்வியை சொல்லாமல் விட்டதேனோ ! //
My dear brother Iqbal selvan,

கான் அகாடமியின் 3500 க்கும் அதிகமான காணோளிகளில் வெறும் 6 மட்டுமே நீங்கள் சொன்ன தலைப்பை பற்றி பேசுகிறது..மற்ற 99% வீடியோக்களைப் பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டதேனோ?????

Peer Mohamed said...

Brother Zafar,
That was a good one. I liked it :)

Peer Mohamed said...

Brother Aashiq,

That's a good question. I will have to think :) :)

Post a Comment