பார்த்ததும் படித்ததும் கேட்டதும் - 2




தமிழ் பகுதி:

1 . அட்டைப்படத்தில் சோகமான செய்திகளைப் போட்டாலும் நடுப் பக்கத்தில் போர்னோ படங்களைப் போட்டு பெண் உடலை வணிகப் பொருளாக்கும் சந்தைக் கலாச்சாரத்துக்கு பிரபல வார இதழ்கள் துணை போவதை எப்போதுமே நாம் எதிர்ப்போம். அபூர்வமாக மார்க்சிய சிந்தனை உடைய சகோதரி நிர்மலா கொற்றவை  தெளிவாக தனது கட்டுரையில் இந்தக் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். "மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே" என்று ஆரம்பிக்கும் இவரது கட்டுரை சரியான சாட்டையடி.

http://saavinudhadugal.blogspot.in/2012/10/blog-post_17.html

 2 பெரியவர் ராமதுரை எழுதும் அறிவியல் பதிவுகள் காத்திரமானவை. நல்ல தகவல்களை உள்ளடக்குபவை. எல்லாவற்றிக்கும் மேலாய் சுவாரசியமானவை.
"இரவு வானின் நிறம் என்ன? . " என்ற கேள்விக்கான அவரது பதில் இங்கே


http://www.ariviyal.in/2012/10/blog-post_14.html


3 .பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் இருப்பதால் வருடத்துக்கு 300 நாட்களுக்கும் மேல் பளிச்சென்று சூரிய வெளிச்சம் கிடைக்கும்   நமது நாட்டில் சில மாநிலங்களில் பவர் தட்டுப்பாடு வருவது நாம் எவ்வளவு சூரிய சக்தியை வீணடிக்கிறோம் என்பதற்கான சான்று. வளர்ந்த நாடுகளே இன்று மிகக் கடுமையாக சூரிய சக்தியை அறுவடை செய்து மின் ஆற்றலில் பெரும் புரட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. நாமும் என்னென்ன செய்யலாம் என்று சொல்லித்தரும் பூவுலகின் நண்பர்கள்.

http://www.poovulagu.net/2012/10/blog-post_17.html

 
ஆங்கிலம:

1 சூப்பர் ஸ்டார்கள் வரிசையில், உலகின் மாபெரும் நிலப்பரப்பை கைவசப்படுத்திய, நீதி நேர்மையின் சிகரமாய்த் திகழ்ந்த , ஒரு பேரரசின் ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்று பின்னால் வந்தவர்களுக்கு பாடம் நடத்திய இரண்டாம் கலீபா உமர் ரலி அவர்களின் வாழ்க்கையின் சிறு பகுதியை பற்றி பேசுகிறார் ஷேய்க் ஓமர் சுலைமான்,


http://www.youtube.com/watch?v=iUsKxPnjYPk

 
2 .சிறந்த புத்தக ஆசிரியர்களை  Google நிறுவனத்தில்   நடக்கும் Authors @Google என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள Google நிறுவனம் அழைக்கும். இந்த முறை அமெரிக்க இளம் முஸ்லிம்களில் பிரபலமான நாடக ஆசிரியர் வஜாஹத் அலி கலந்து கொண்டு தனது பயணத்தை நகைச்சுவை கலந்து விவரிக்கிறார் .

http://www.youtube.com/watch?v=GqpC3aP_6qg



4 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பரந்துப்பட்டு படிக்கும் பழக்கம் இருந்தாலும் சில சமயங்களில் சில விடயங்கள் தவறி விடுகின்றன பகிர்வுக்கு நன்றி

Peer Mohamed said...

அலைக்குமுஸ்ஸலாம் ஹைதர் காக்கா
வருகைக்கும் கருத்துக்கும் jazaakhallaah !!!

ஆமினா said...

சலாம் அண்ணா...

ஓ இப்படி லாம் பதிவு தேத்தலாமா? அப்ப என் ப்ளாக்கை தூசு தட்ட வேண்டியது தான்..

பகிர்வுக்கு நன்றி

Peer Mohamed said...

அலைக்குமுஸ்ஸலாம் சிஸ்டர்,
ஹலோ இது என்னோட டெக்னிக். நீங்க காப்பி அடிக்க கூடாது :)

Post a Comment