ஆர்க்டிக் பிரதேசம் நோக்கி வந்த ஒரு பள்ளி !!!



இனுவிக் நகரம் (http://en.wikipedia.org/wiki/Inuvik) ...கனடாவின் வடக்குப் பக்கம் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதி. வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் கொடூரமான குளிர். சில மாதங்கள் மட்டும் கோடைக்காலம். அந்தக் காலத்தில் சூரியன் மறையாது. இரவில் கூட பளிச்சென்று வெயில் அடிக்கும். காலநிலை அங்குமிங்குமாக மக்களை பந்தாடும் பகுதிகளில் ஓன்று.

சுமார் 3500 பேர் வசிக்கும் இந்தப் பகுதியில் சுமார் 100 முஸ்லிம்கள். ஒரு லாரியின் கண்டைனரை ஒரு அறை போன்று மாற்றி அதனை பள்ளிவாசலாக பயன்படுத்தி வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல நிற்பதற்குக் கூட இடம் இல்லை..புதிதாக ஒரு பள்ளிவாசல்  கட்டலாம் என்றால் இங்கே ஆகும் செலவு மிக மிக அதிகம்..பொதுவாக வட அமெரிக்காவில் நிறைய பகுதிகளில் கட்டுமானச் செலவுகள் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. இத்தனைக்கும் வீடோ அலுவலகமோ அல்லது பள்ளிவாசலோ எதுவாக இருந்தாலும் மரத்தால் தான் கட்டுவார்கள். ஆனாலும் செலவு ரொம்ப அதிகம்..

பெருகும் மக்களுக்கு ஏற்ப ஒரு பள்ளிவாசல் அமைக்க முடியவில்லை என ஏங்கியவர்களுக்கு ஆறுதலாக ஒரு நிறுவனம் சுபச் செய்தி சொல்லியது. கனடாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு அறக்கட்டளை பள்ளிவாசலை sponsor செய்வதாகச் சொல்லியது..ஆனாலும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஆர்க்டிக் பகுதியில் கட்டுமானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை..ஏனெனில் அவர்கள் கொடுக்க நினைத்திருந்த தொகையை விட கட்டுமானச் செலவு அதிகம்...என்ன செய்வது என்று யோசித்தவர்களுக்கு ஒரு ஐடியா.

இங்கேயே நமது பகுதியிலேயே மஸ்ஜிதை கட்டி ஆர்க்டிக் பகுதிக்கு எடுத்தச் செல்லலாம் என்பது தான் அந்த ஐடியா...ஆகா..என்னமா ப்ளான் பண்றாங்க...

சிக்கல் ஆரம்பம்..வெறுமனே தரை வழி இனுவிக் பகுதியை அடைய முடியாது..தரை வழி அப்புறம் நீர் வழி என்று மாறி மாறிச் செல்ல வேண்டும்..அதிலும் குளிர் காலம் ஆறுகள் உறைந்து பனிப்பாலையாக மாறிவிடும். அதுவழியே செல்ல வேண்டும்...ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள்..இது போன்று ஒரு structure இங்கிருந்து அங்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை...கட்டுமானம் நடக்கும் வின்னிபெக்-இல் இருந்து மஸ்ஜித் நிறுவப்படவேண்டிய இனுவிக் செல்ல சுமார் 4500 கிலோமீட்டர்கள் :) :)






சரி முடிவெடுத்து விட்டார்கள்..பள்ளிவாசல் கட்டப்பட்டது. முடிந்த பின் பயணம் ஆரம்பம்.எதிர்பார்த்ததுபோலவே நிறைய logistics பிரச்னைகள். எடுத்துச் செல்லப்படும் structure ஐ விட குறுகிய பாலங்கள். அப்புறம் சாலைப் பயணம் முடிந்து கப்பலோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு barge-இல்(barge என்றால் ஒரு அம்மாம் பெரிய பரிசல் என்று வைத்துக் கொள்ளுங்கள் :) ..படம் கீழே )  கொண்டு வைக்கவேண்டும் நீர் வழிப் பயணத்துக்கு.






                                        ரொம்ப ஈசியான ஒரு சாலைப்பயணம் :)



 பாலத்தை விட வண்டியில் இருக்கும் லோடு பெருசு..என்ன பண்றது ..பாலத்தை கொஞ்சம் tinkering பண்ண வேண்டியது தான்


எல்லா சவால்களும் தாண்டி சரித்திரப் புகழ்மிக்க அந்த 4500 கிலோமீட்டர் பயணம் முடிந்து மஸ்ஜித் ஆர்க்டிக் பிரதேசம் வந்தடைந்தது. ஊருக்கு ஏற்ற மாதிரியே "Midnight Sun Mosque" (நள்ளிரவுச் சூரியன் பள்ளிவாசல் ) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் :)

மீடியா நன்றாக கவர் செய்த இந்த சரித்திரப் புகழ் மிக்க பயணத்தை இரு சகோதரிகள் நிலோபர் ரஹ்மான் மற்றும் அவரது சகோதரி சைரா ரஹ்மான் இருவரும் துவக்கம் முதல் இறுதி வரை படம் பிடித்திருக்கிறார்கள். அதனை ஒரு ஆவணப்படமாக வெளியிட இருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் .தற்போது நிதிவசதி இல்லாமல் இந்த முயற்சி முடிவடையாமல் இருக்கிறது.

அதற்காக வெளியிடப்பட்ட இந்த trailer பாருங்கள்..அட்டகாசம் :)






பயணத்தின் முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு காணொளியாக இங்கே




இனுவிக் நகர official வலைத்தளத்தில் கூட அவர்கள் வெளியிட்ட கையேட்டில் சுற்றுலா இடமாக இதனை அறிவித்திருக்கிறார்கள். In page 19

நிலோபோர் சைரா சகோதரிகளின் வலைத்தளம்

தொடர்புடைய பத்திரிகைச் செய்தி



ஒருவழியாக பள்ளிவாசல் நிறுவப்பட்டு பூமியின் துருவப்பகுதிகளில் மிக தொலைதூரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் என்ற பெருமையை கொண்டுள்ளது...மாஷா அல்லாஹ் !!!

9 comments:

Yasmin Riazdheen said...

மாஷா அல்லாஹ்..

என்ன ஒரு வலுவான முயற்சி...

பலத்த ஈமான் இருந்தால் வானத்தையும் தொட்டு விடலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்..

அல்லாஹு அக்பர்...

மிக அருமையான அறியாத விஷயம் அறிய வைத்ததற்கு...

ஜசக்கல்லாஹ் ஹைரன்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.பீர்,
மாஷாஅல்லாஹ்.
அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.பீர்.
சிறப்பான முயற்சி.
வெற்றிகரமான சாதனை.
அல்ஹம்துலில்லாஹ்.

Nazaie said...

Masha allah....A Great Work !!

Peer Mohamed said...

Thank you Sister Yasmin !!!

Peer Mohamed said...

Wa alaikumussalam citizen

Thank you

Peer Mohamed said...

Thank you Nazaie !!!

enrenrum16 said...

Masha Allah....இவ்விடாமுயற்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக!

Unknown said...

மாஷா அல்லாஹ் . சிறந்த பதிவு .. சரியான முயற்சி ..

FANTASTIC ...

ஜசகல்லாஹ் க்ஹைர் .. :)

Peer Mohamed said...

வருகைக்கும் கருத்துக்கும் ஜசாகல்லாஹ் சுல்தான் !!

Post a Comment