நியூயார்க் நகரம்...உலகின் மிக முக்கிய பெருநகரங்களில்
ஒன்று. அமெரிக்காவின் வர்த்தகத் தலைநகரம்...முரண்பாடுகளின் மூட்டை என்றும்
சொல்லலாம் :) ... நல்லது கெட்டது என்று எல்லாத்திலுமே முதலிடம்...தெருவில்
நடந்து சென்றால் நீங்கள் இதுவரை கேட்டிராத உலகின் எல்லா மொழிகளையும்
கேட்கலாம்..உலகின் பெருவாரியான இன ,தேச மக்களையும் பார்த்துவிடலாம். அப்படி
ஒரு கலவை !
YELLOWCAB நகரின் உயிர்நாடிகளில் ஒன்று...இடப் பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான பார்க்கிங் செலவு காரணத்தால் பெரும்பாலானவர்கள் சொந்தக் காரில் வராமல் இந்த yellowcab தான் பயன்படுத்துவார்கள்...
YELLOWCAB நகரின் உயிர்நாடிகளில் ஒன்று...இடப் பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான பார்க்கிங் செலவு காரணத்தால் பெரும்பாலானவர்கள் சொந்தக் காரில் வராமல் இந்த yellowcab தான் பயன்படுத்துவார்கள்...
அப்படி ஒரு டாக்சியில் ஏறி பயணம்
செய்கிறீர்கள்...பொதுவாக பின்னிருக்கையில் அமரும்போது முன்னிருக்கையின்
பின்னால் உள்ள இடத்தில் ஒரு சின்ன ஸ்க்ரீன் வைத்து செய்திகள்
ஓடவிட்டிருப்பார்கள்.அல்லது ஒரு திரைப்படம்..இல்லையெனில் சில வீடியோ
விளம்பரங்கள்...
ஆனால் நீங்கள் ஏறிய டாக்சியில் கீழ்க்காணும் வாசகம் இருக்கிறது :)
ஆனால் நீங்கள் ஏறிய டாக்சியில் கீழ்க்காணும் வாசகம் இருக்கிறது :)
LOOK BEHIND AND CHOOSE
FREE CANDY OF YOUR CHOICE !!
ENJOY AND MAKE A WISH !!!
REMEMBER LIFE IS TOO SHORT SO
BE HAPPY IN YOUR LIFE
FREE CANDY OF YOUR CHOICE !!
ENJOY AND MAKE A WISH !!!
REMEMBER LIFE IS TOO SHORT SO
BE HAPPY IN YOUR LIFE
திரும்பி பார்க்கிறீர்கள்..காரின் பின்பக்கம் முழுவதும் சாக்லேட் மற்றும் மிட்டாய்கள் :)
ஏன்
இப்படி என்று கேட்டால் புன்னகைக்கிறார் டாக்சியின் டிரைவர் மன்சூர் காலித்
..
நியூயார்க் நகர வாழ்க்கை கடும் மன அழுத்தத்தை தரக்கூடியது... எனது காரில் பயணம் செய்யும் பயணிகள் stress நிறைந்து பயணிப்பதை பார்த்திருக்கிறேன்..அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைக்கும் ஒரு சின்ன முயற்சி தான் இது...

எப்போது தோன்றியது இந்த யோசனை உங்களுக்கு?
1993
இல் பாகிஸ்தானில் இருந்து நியூயார்க் வந்தேன்..1997 லிருந்து டாக்சி
ஒட்டுகிறேன்...சமீபத்தில் இரண்டு வயதான எனது மகனுக்கு இதய நோயால் பாதிப்பு
வந்தது. இரண்டு முறை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தும்
முடியவில்லை.பின்னர் சிறுநீரகமும் பாதிப்படைந்து ..
ஆஸ்பத்திரியில் அவன் படுத்திருக்கும்போது பகலெல்லாம் கார் ஓட்டிவிட்டு இரவு ஒரு மணிக்கு அவனை பார்க்க மருத்துவமனை செல்வேன்.. செல்லும்போது அந்த வார்டில் டூட்டியில் இருக்கும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு காபி மற்றும் snacks எடுத்துச் செல்வேன்.அந்த இரவு வேளையில் இப்படி எதிர்பாராமல் நான் எடுத்துச் செல்லும் காபி அவர்களுக்கு பிடித்திருந்தது...என்னிடம் அவர்கள் பரிவாக இருந்தார்கள் அதுபோலவே நானும் அவர்களிடம்..
நோய் முற்றி ஒருநாள் அவன் இறந்து போனான்..நிலைகுலைந்து போனேன்..மீளவே முடியாத அதிர்ச்சியில் இருந்தேன்...
ஆனால் அதில் இருந்து நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்.. "வாழ்க்கை மிகச் சிறியது" என்ற பாடம் தான் அது..
மகனின் மரணத்திற்குப் பின்னால் திடீரென ஒருநாள் கடவுள் இந்த எண்ணத்தை என்னில் விதைத்தார். அன்றிலிருந்து இப்படி காரில் மிட்டாய் கொடுக்கும் செயலை செய்ய ஆரம்பித்தேன்"என்கிறார். தனது சோகத்தை மறந்து வித்தியாசமாய் செயல்படும் இந்த டிரைவர் பயணிகளின் தற்போதைய ஸ்டார்!
இந்த வித்தியாசமான அணுகுமுறையை ரசித்த பயணி ஒருவர் இதைப் பற்றி tweet செய்ய சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது இந்தச் செய்தி. பிரபலமான பத்திரிக்கைகளில் இந்த செய்தி வெளிவந்தது. பார்க்க
YELLOW CAB இன் அதிகாரபூர்வ இணையதளமும் இவரை பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. பார்க்க

https://twitter.com/CandyCabNYC என்ற twitter ID யில் தினமும் tweet செய்கிறார். இவர்..இவரின் காரில் பயணம் செய்தவர்களும் இவரைப் பற்றி tweet செய்கின்றனர். பாகிஸ்தானுக்கு திரும்பி வாருங்கள்..உங்களைப் போன்றவர்கள் தான் இந்த தேசத்துக்கு இப்போது தேவை என்று ட்விட்டரில் அழைக்கிறார் ஒருவர்.. பெருகும் மக்களின் நன்றிக்கு ட்விட்டரில் இப்படி பதில் சொல்கிறார் காலித்..
I am so Thanks full to Allah (GOD). HE IS GREAT. And you are his beautiful people's .
ஓக்கே சகோஸ்... விஷயம் அவ்வளவுதான்... சரி இனி நீங்களும் நானும் என்ன செய்யப் போகிறோம் ??இதான் முக்கியமான விஷயம் :-)
தினமும் காலையில் எழுந்ததும் "இன்று சிலரின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வது எனது தீர்மானம் என்று உறுதி எடுப்போம்"... உறுதி எடுக்குறது மட்டும் இல்ல... அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிவிட்டு மனநிறைவோட இரவு தூங்கச்செல்வோம் :-) ட்ரை பண்ணிதான் பாருங்களேன் :-)
Come on சகோஸ் !! சிரிக்க வைப்போம் ...மகிழ்ச்சியடைவோம் !! வாழ்க்கை மிகச் சிறியது !!!
"சிரித்த முகத்துடன் உன் சகோதரனைச் சந்திப்பது கூட தர்மம் தான் " - நபிமொழி
Tweet | |||||
31 comments:
சலாம் சகோ....
மகனின் மரணத்திற்க்கு பின் அடுத்தவரை சந்தோஷப் பட வைக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது பாராட்டப் படக்கூடிய செயல் தான்... மன்சூர் செயலால் உயர்ந்து விட்டார்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
//தினமும் காலையில் எழுந்ததும் "இன்று சிலரின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வது எனது தீர்மானம் என்று உறுதி எடுப்போம்"... உறுதி எடுக்குறது மட்டும் இல்ல... அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிவிட்டு மனநிறைவோட இரவு தூங்கச்செல்வோம் :-)//
செம க்யூட் பீர் முஹம்மத். மிக அழகான, படித்து படித்து ரசிக்க கூடிய கட்டுரை.
எழுத்து நடை ரொம்பவே நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஸலாம்
ம்ம்ம் ... பொதுவாகவே ஸலாம் சொன்னால் முகத்தில் புன்னகை ஆட்டோமடிகா வந்துரும் ... வரணும் ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அழகான கவிதையை படித்தது போன்ற சந்தோசம் உங்கள் பதிவை படித்ததும் சகோ..:)
வாழ்வில் சிலருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று.. தன் சோகங்களையும்,அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியாக மாற்றும் வித்தை..
அருமையான மனிதரை அறிமுக படுத்தியதற்கு நன்றி சகோ..:-)
#தினமும் காலையில் எழுந்ததும் "இன்று சிலரின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வது எனது தீர்மானம் என்று உறுதி எடுப்போம்"... உறுதி எடுக்குறது மட்டும் இல்ல... அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிவிட்டு மனநிறைவோட இரவு தூங்கச்செல்வோம் :-) ட்ரை பண்ணிதான் பாருங்களேன் :-)#
கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்க வேண்டும்..அருமை சகோ...
அல்ஹம்துலில்லாஹ், நல்ல கருத்தை பகிர்ந்து உள்ளீர்கள். இஸ்லாம் காட்டி தந்த வழியில் நாம் வாழ்தல் கூட நாம் செய்யும் தாவா தான்.
//இஸ்லாம் காட்டி தந்த வழியில் நாம் வாழ்தல் கூட நாம் செய்யும் தாவா தான் // உங்கள் கருத்து நூறு சதம் உண்மை ஹாஜா மைதீன்
மாஷா அல்லாஹ்!
கட்டுரையும் எழுத்து நடையும் அருமை, படித்தவுடன் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்!.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
சிறிய பதிவு சொல்வதோ மிகப்பெரிய விடயம்.
பிறரை அதிகம் மகிழ்விப்போர் பின்னால் மிகப்பெரும்
சோகம் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் நிகழ்வு.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
இன்ஷா அல்லாஹ் தொடந்து எழுதுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
//Come on சகோஸ் !! சிரிக்க வைப்போம் ...மகிழ்ச்சியடைவோம் !! வாழ்க்கை மிகச் சிறியது !!! //
இனி என்னோட மொக்க பிளாகை தூசு தட்டி எழுப்பிட வேண்டியதுதான் :-)))
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ. உங்கள் தளமும் அந்த Yellow Cab போல் தான் உள்ளது,
அமெரிக்கவில் "Health Street's DNA Testing" என்ற வாகனம் ஒடிக்கொன்றுக்கிறாது. அதற்குகிடையில் இது போன்ற வாகனம் ஒடுவது மகிழ்ச்சி அழிக்கிறது.
இன்ஷா அல்லாஹ் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்.
ஜெஸக்கல்லாஹ் ஹைர் (சகோ.)
நியூயார்க்கின் இயந்திரத்தனமான வாழ்க்கையிலும் மனிதநேயம் மலர்வது ம்கிழ்ச்சியான செய்தி.
புன்னகைக்கு செலவே இல்லை!
புன்னகைக்கு விலை மதிப்பும் இல்லை!!
Wa alaikmussalam Siraj bhai !!
Thanks for visiting
wa alaikumussalam aashiq
//எழுத்து நடை ரொம்பவே நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்க. // இப்பிடியே மனுசன உசுப்பேத்துங்க :)
wa alaikumussalam mydeen, aysha, haja,abunihaan,baraari
//கட்டுரையும் எழுத்து நடையும் அருமை, படித்தவுடன் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்!.//
Thanks a lot syed
//இன்ஷா அல்லாஹ் தொடந்து எழுதுங்கள். //
wa alaikumussalam muslim. Please do duah for the same !!
//இனி என்னோட மொக்க பிளாகை தூசு தட்டி எழுப்பிட வேண்டியதுதான் :-)))//
wa alaikumussalam jailaani. seyyunga. pls. teakkadaikkum vaanga :)
Thank you nizam and jafarullah kaakka
இங்க்லீஸ்ல கமென்ட் போடுற அட்மின்கள் ப்ளாக்குக்கு நான் வரதில்ல!
மீ கெளம்பிங் கோபத்தோட!
ச்சரி...ச்சரி... ரொம்ப கெஞ்சி கேட்டதுனால சமாதானம் ஆகிட்டேன்!
:-)
இப்படியெல்லாம் நியூஸ் கொடுக்குறதுக்கு மொதல்ல நன்றிங்கண்ணா... உங்க ப்ளாக் வந்தா அமெரிக்காக்கு வந்துட்டு போற மாதிரியே ஒரு பீலிங்கு! செலவில்லாம, விசா இல்லாம எங்களையெல்லாம் கூடிட்டு போறதுக்கு நன்றி!
அப்பாலிக்கா... சாக்லெட் ட்ரைவர் பத்தி... ரொம்பவே யோசிக்க வைத்த ஒரு மனிதன்! பகிர்வுக்கு நன்றி பீர் அண்ணா..
வாழ்த்துகள்...
//இங்க்லீஸ்ல கமென்ட் போடுற அட்மின்கள் ப்ளாக்குக்கு நான் வரதில்ல!
மீ கெளம்பிங் கோபத்தோட! //
யா அல்லாஹ்..!! இங்கேயும் நீங்க ஒரு அட்மினாஆஆஆஆஆ....!!! :-))
//யா அல்லாஹ்..!! இங்கேயும் நீங்க ஒரு அட்மினாஆஆஆஆஆ....!!! :-)) //
ஹி..ஹி..ஹி... இதுக்கே இப்படி நொந்துக்கிட்டா எப்படி ஜெய் :-)
//இங்க்லீஸ்ல கமென்ட் போடுற அட்மின்கள் ப்ளாக்குக்கு நான் வரதில்ல!
மீ கெளம்பிங் கோபத்தோட! //
அலுவலகத்தில் இருந்தேன்..தமிழில் டைப் செய்ய நேரம் ஆகும் என்பதால் ஆங்கிலம் :)
//யா அல்லாஹ்..!! இங்கேயும் நீங்க ஒரு அட்மினாஆஆஆஆஆ....!!! :-)) //
சகோ ஆமினா, யார் இந்த ஜிலானி என்பவர்...புடிங்க மேடம் ..புடிச்சு ஜெயில் ல போடுங்க... கம்பெனி ரகசியத்த வெளில சொல்றாரு :)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
மிக அழகிய பதிவு தொடருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வித்தியாசமான பதிவு
தொடர,
வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்
சகோ பீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்
வித்தியாசமான பதிவு
தொடர,
வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்
//அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
மிக அழகிய பதிவு தொடருங்கள் //
wa alaikumussalam hyder kaakka. Thank you
Wa alaikumussalam gulam. Thank you
Wa alaikumussalam. Thank you suvanap priyan kaakka
Post a Comment