திருமறை மனனப்போட்டி !!! நெகிழ வைக்கும் பிஞ்சுகள் !!!

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் !!!!

ஒரே ஒரு புத்தகம்! ஒரே மொழி! உலகம் முழுவதிலிருந்தும் வந்து குவியும் போட்டியாளர்கள். புத்தகம் எழுதப்பட்டிருக்கும் மொழியின் எந்த வசனத்தையும் பொருளுணர்ந்து படித்தறியாத போட்டியாளர்கள். இப்படி அர்த்தம் புரியாவிடின் கூட 600 பக்கங்களுக்கு மேற்ப்பட்ட அந்த புத்தகத்தை ஒரு புள்ளி கூட மாறாமல் ஞாபகத்தில் வைத்திருப்பவர்கள். இப்படி பல வித்தியாசமான சுவாரசியங்கள்!

உலக அளவில் திரைப்படங்களை தயாரிக்கின்ற, ஒளிபரப்புகிற HBO சேனல் கடந்த வருடம் "KORAN BY HEART " என்று ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. வருடா  வருடம் எகிப்தில் நடைபெறும் " The International Holy Qur'an Competition " போட்டியையும் அதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும் மூன்று சிறார்களையும் மையப்படுத்தும் ஒரு ஆவணப்படம்.

i )  மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானைச் சேர்ந்த நபியுல்லாஹ்  (Nabiullah )
ii ) இந்துமாப்பெருங்கடல் நாடான மாலத்தீவைச் சேர்ந்த சிறுமி ரிப்தா  (Rifdha )
iii ) மேற்கு ஆப்பிரிக்க நாடான செனெகல் நாட்டைச்சேர்ந்த ஜமீல் (Djamil )

மூவரும் வெறும் பத்து வயதே ஆனவர்கள். அரபியை தாய்மொழியாக கொண்டிராதவர்கள். ஆனாலும் புனிதமான குரானை முழுவதும் மனனம் செய்தவர்கள்.

இந்த மூன்று சிறுவர்களும் எந்த பின்புலத்திலிருந்து வருகிறார்கள்? எப்படி இந்த போட்டிக்கு தயாராகிறார்கள்? மொழியும் கலாச்சாரமும் தெரியாத ஒரு புதிய தேசத்திற்கு சென்று எப்படி அருமையாக குரானை ஓதுகிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் அழகாக  காட்டுகிறது.

"ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நீதான் பிரதிநிதி. பயப்படாமல் அழகாக ஒது" என்று உணர்த்துவதினூடே, குரானின் பக்கம் மக்கள் திரும்பும்போது உலகில் கொலை கொள்ளை நீங்கி அமைதி திரும்பும் என்று பத்து வயதான சிறுவன் ஜமீலுக்கு போதிக்கிறார் அவன் ஆசிரியர். !!!

காருக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே விளையாட்டுத்தனமாக போட்டிக்கு வரும் சிறுவன் நபியுல்லாஹ் !!!

பிறந்ததிலிருந்து அம்மாவை பிரிந்திராத முதல்முறையாக அம்மாவை  விட்டு அப்பாவுடன் கடல் மார்க்கமாக sea plane இல் ஏறி பறந்து செல்லும் ஹிஜாப் அணிந்த சின்னஞ்சிறுமி ரிப்தா !!!

70 நாடுகளில் இருந்து வந்திருக்கும் 110 போட்டியாளர்களுடன் வயது வரம்பின்றி இவர்கள் போட்டியிடுவதும் சிறிதும் பிசகாமல் மயக்கும் குரலில் அவர்கள் ஓதுவதும் உங்கள் காதுகளில் இன்பத்தேன் கொண்டுவந்து பாய்ச்சும்!

இந்த ஆவணப்படத்தை இயக்கிய கிரேக் பார்கேர் (Greg Barker) இவ்வாறு உணர்ச்சிமிகுதியுடன் குறிப்பிடுகிறார்: "சந்தேகமில்லாமல் இந்த சிறுவன் ஒரு genious . அரபி தெரியாமலே இப்படி ஓதுவது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று கூறி சிறுவன் நபியுல்லாஹ்வை நீதிபதிகள் முத்தமிடுவது உங்கள் கண்களில் நீரை கோர்க்கச்செய்யும்"

போட்டி
நடப்பதை கண்காணிக்கும் குரானிய ஒலியின் சந்தத்தை ஆய்வு செய்யும் கிறிஸ்டினா நெல்சனின் (Kristina Nelson) பேட்டியும் இடம்பெறுகிறது'The Art of Reciting the Quran' என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவர். குரானின் ஒலி பாதுகாக்கப்பட்டது பற்றி பேசுகிறார் இவர் : “முதல்முறை நபியுல்லாஹ் போட்டியில் ஓதியதை கேட்டபோது எல்லாருமே உறைந்து போனோம்.முஸ்லிம் அல்லாதவர்களின் காதுகளுக்கு கூட உணர்ச்சிமிக்கதாக, தெய்வீகமாக மற்றொரு உலகிலிருந்து வந்தது போன்று இருந்தது. அதிலும் பத்து வயதே ஆன சிறுவன் என்பதால் நம்மை ஆட்கொள்ளச்செய்தது. ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரன் தனது உச்சகட்டத்தை வெளிப்படுத்துவது போன்று இருந்தது"


// The first time we heard Nabiollah recite at the competition, everyone was completely transfixed. Even to non-Muslim ears, his performance was so emotional, so spiritual and otherworldly, and coming from a 10-year-old boy, really engrossing. It's like seeing an elite athlete at the height of their abilities. That was the moment I knew we really had a film. I wanted to know more. Does he know what he's saying? How did he come from the middle of Tajikistan to this tournament in Cairo? What's going to become of him?//

தவறாக ஓதியதால் போட்டியில் வெற்றி பெறமுடியாத ஆப்பிரிக்க சிறுவனுக்கு எகிப்தின் ஒரு முக்கியமான பள்ளிவாசலில் வாய்ப்பு கொடுக்கப்படுவது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி.

உலகின் எல்லா மூலையிலும் மொழியின் தடைகளைத் தாண்டி புனித குரான் மனனம் செய்யப்படுவதும், தங்கள் அதி அற்புதமான குரல்களால் அதன் சந்தம் மற்றவர்  காதுகளில் தேனாக பாய்ச்சப்படுவதும்  கடந்த 1400 வருங்களாக நடந்தேறும் ஒரு அற்புத நிகழ்வு. தஜிகிஸ்தானின் நபியுல்லாஹ்வும், செனகலின் ஜமீலும், மாலத்தீவின் ரிப்தாவும் அதன் கடந்த வருடத்திய சாட்சிகள் !!! இறைவனே மிகப்பெரியவன்.

அழகான
இந்த ஆவணப்படத்தை  நீங்களும் பாருங்கள் :


ஆவணப்பட இயக்குனர் கிரேக் பார்கரின் பேட்டியை தவறாமல் படியுங்கள். நல்ல கருத்துக்கள்.

அதிக தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கை பார்க்கவும்.
http://www.imdb.com/title/tt1766189/

15 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிக நல்லதொரு நேர்த்தியான முறையில் நிகழ்ச்சியை பகிர்ந்துள்ளீர்கள் சகோ.பீர்..! வீடியோ அருமை..! நன்றி சகோ.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்றுதான் யூடுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

//முதல்முறை நபியுல்லாஹ் போட்டியில் ஓதியதை கேட்டபோது எல்லாருமே உறைந்து போனோம்.//

உண்மை தான்.
நபியுல்லாஹ் தான் பர்ஸ்ட் வருவார்ன்னு நெனச்சேன் :-)

அருமையான பகிர்வு சகோ. விமர்சனம் நேர்த்தியா இருக்கு! வாழ்த்துகள்!

தொடருங்கள்

சிராஜ் said...

சலாம் சகோ....

பார்க்கவே பரவசமா இருந்துச்சு.. பகிர்விற்கு நன்றி... குரான் அர்த்தம் புரியாட்டியும், இந்த மாதிரி ஓதுர கேட்கும் போது ஒரு இனம்புரியாத உணர்ச்சி வர்றது ரொம்ப ஆச்சரியமான ஒரு விஷயம்...

Peer Mohamed said...

Wa alaikumussalam hyder annan,

Thank you

Peer Mohamed said...

Wa alaikumussalam ashik annan
Thank you !!

Peer Mohamed said...

Wa alaikumussalam amina sister,

//நபியுல்லாஹ் தான் பர்ஸ்ட் வருவார்ன்னு நெனச்சேன் :-) // Me too :)

Peer Mohamed said...

Wa alaikumussalam siraj annan
Thank you !!!

Unknown said...

Assalamu alaikum,
Masallah everybody was amazing with their recites.

Unknown said...

Peer nice work

Peer Mohamed said...

wa alaikumussalaam. Thanks inshy

Jaleela Kamal said...

mika arumai

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ் , ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)

Peer Mohamed said...

Thank you sister jaleela

Peer Mohamed said...

wa alaikumussalam.
thank you brother jailani

Post a Comment