வீட்டுத்தோட்டமும் இப்தாரும் !!!

ஒரு உறவினர் வீட்டுக்கு இப்தார் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். பல தசம ஆண்டுகளுக்கு முன்னே அமெரிக்கா வந்து செட்டில் ஆகி அமெரிக்கர்கள் ஆகவே மாறியவர்கள் என்பதால் பீட்சாவும் பர்கரும் தான் வைத்திருப்பார்களோ என்று எண்ணிச்சென்ற எனக்கு பிரியாணியும் தால்ச்சாவும் அதிர்ச்சியை கொடுத்தது. தேவையான அளவு மட்டுமே spice சேர்த்து acidity தொந்தரவுகள் வாராமல் ஆரோக்கியமான உணவு.

இவையெல்லாம் விட பெரிய தகவல் எனக்கு கடைசியில் காத்திருந்தது. அது என்னவெனில், உணவில் அவர்கள் சேர்த்திருந்த காய் கனிகள் அனைத்துமே அவர்களே வீட்டில் விளைவித்துக் கொண்டது என்பது தான். ஆச்சரியமாக இருந்தாலும் இது இன்று நிறைய அமெரிக்கர்கள் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் ..

அமெரிக்கர்கள் சில வருடங்களாக, குறிப்பாக கடந்த பத்து வருடங்களாக உணவுப்பொருட்களில் organic வகை உணவுகளை உட்கொள்ளுவதை அதிகமாக்கி வருகிறார்கள். எல்லா கடைகளிலும் organic பொருட்கள் வைக்கும் பகுதி பெரிதாகிக் கொண்டே போகிறது. அதன் இன்னொரு உச்சம் தான் ரசாயனங்கள் பயன்படுத்தாமல் வீட்டிலேயே சிறிய தோட்டம் வைத்து காய் கனிகள் பயிரிடுதல் .

இந்தியாவில் நடுத்தர நகரங்களில் கூட முன்பு பழக்கமாக இருந்த ஒரு விடயம் தற்போது அருகி வருகிறது. சந்தையில் கிடைக்கும், ரசாயனங்களால் செறிவூட்டப்பட்ட காய்களால் உடல் முழுவதும் நச்சுப் பொருட்களின் அளவு அதிகரித்தது தான் மிச்சம்.
முன்பொரு காலத்தில் இந்திய கிராமங்களில் பெருவாரியாக இருந்த வீட்டுத்தோட்டம் இன்று அமெரிக்கர்களால் அழகாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. நாமோ பாரம்பரியங்களை விட்டு ரசாயனங்களிடம் சரணடைகிறோம்.

மேலும் படிக்க
1. http://www.sramakrishnan.com/?p=2471
2.http://maduraivaasagan.wordpress.com/2011/07/28/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E2%80%93-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

8 comments:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

முதல் கமென்ட் :-) (??)

இதென்ன தமிழ் ப்ளாக்கர்களுக்கு வந்த புது சோதனை??

வாழ்த்துகள்... கலக்குங்க பீர் அண்ணா !

Ayushabegum said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வாழ்த்துக்கள் சகோ..:-))

Peer Mohamed said...

Wa alaikumussalam Amina,

Thanks you :)

//இதென்ன தமிழ் ப்ளாக்கர்களுக்கு வந்த புது சோதனை??// Hi hi :)

Peer Mohamed said...

Wa alaikumussalam Ayusha,

Thank you :)

Anisha Yunus said...

as Salamu alaykum Brother,

Are you in US? Where?

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் . நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் பீர் பாய். தொடர்ந்து எழுதுங்கள்.

@ அன்னு சிஸ் : US னா Uzhavar (உழவர்) Santhai (சந்தை) தானே :)

Peer Mohamed said...

Wa alaikumussalam sister annu
Yes. I am in Somerset,New Jersey

Peer Mohamed said...

//அஸ்ஸலாமு அலைக்கும் . நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் பீர் பாய். தொடர்ந்து எழுதுங்கள்.//
Wa alaikumussalam. DO duah brother.

//@ அன்னு சிஸ் : US னா Uzhavar (உழவர்) Santhai (சந்தை) தானே :)// ROFL

Post a Comment