பார்த்ததும் படித்ததும் கேட்டதும் - 1

அஸ்ஸலாமு அலைக்கும் !!


1. இளம் எழுத்தாளர்களில் நான் படிப்பவர்களில்  ஒருவர் முத்துகிருஷ்ணன்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் சமீபத்திய நிலவரம் குறித்து ஆழமான கட்டுரை ஒன்றை சமீபத்தில் வரைந்திருந்தார்.
ஏன் பன்னாட்டு அணுசக்தி நிறுவனகள் இந்தியாவைக் குறிவைக்கின்றன? ஏன் திடீரென இந்த அணுசக்தி மோகம்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றுள்ளார்.


2. சூப்பர்ஸ்டார்கள் என்ற தலைப்பில் இஸ்லாமிய சமூகத்தின் தலைசிறந்த பெரியார்களை அறிமுகப்படுத்துகிறார் ஷேக் ஓமர் சுலைமான். பத்து நிமிடங்களில் இறைத்தூதரின்(ஸல் ) நம்பிக்கைக்குரிய  நண்பரும்  அவருக்குப் பின்னால் உலகின் தலைசிறந்த நம்பிக்கையாளருமான முதல் கலீபா அபூபக்கர் ரலி அவர்களைப் பற்றி சின்ன அழகான உரை.


3. தீராத நோய்களும் நாட்பட்ட நோய்களும் ஏற்படுத்திச் செல்லும் வலிகளும் வடுக்களும் தாங்க முடியாதவை. மெல்லக் கொல்லும் நஞ்சு போல மனிதனை  கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி நகரவைப்பவை. .
யாரென்றே தெரியாத ஒரு சகோதரியின் இந்த துயரம் நெஞ்சை பாதித்தது. நம்மாலான உதவிகளை அனுப்புவோம்.. கூடவே பிரார்த்தனைகளும். அவ்விரண்டையும் தவிர்த்து கொடிய நோய்களுக்கு எதிராய் நிராயுதபாணிகள் நாம்.

படித்ததில் கனத்தது மனிதாபிமானியின் பதிவு

4. கேன்சர் நோயின் தீவிரம், பாதிப்பு போன்றவற்றை குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட மரணத்தையும்.
தோலில் வரும் கேன்சர் மற்றவற்றை விட கொஞ்சம் வீரியம் குறைந்தது என்பதும் அதற்கான சிகிச்சைகள் மற்றவற்றை விட நிறைய இருக்கிறது என்பதும் ஒரு பெரிய ஆறுதல். ஆனாலும் கேன்சர் கேன்சர் தான்..சந்தேகமே இல்லை..
அல்லாஹ் இவருக்கு பூரண குணத்தை அளித்து அவர் களப் பணிகளுக்காத் திரும்ப வேண்டும் என்பது அணைத்து முஸ்லிம்களின் துஆ. பதினெட்டு வருடத்துக்கு முன்பு எங்கள் ஊருக்கு மஞ்சள் பையை தோளில் போட்டு பொதுக்கூட்டம் பேச வந்த அந்த எளிமையான மனிதர் இன்றும் பசுமையாக கண்ணில் நிற்கிறார்.

10 comments:

ஆமினா said...

வ அலைக்கும் சலாம் வரஹ்...


பகிர்வுக்கு நன்றி சகோ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அலைக்கும் ஸலாம்
சகோ.பீர்,
முற்றிலும் வித்தியாசமான பதிவு. புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி சகோ.

அப்புறம்.....
அடுத்த வார வலைச்சர ஆசிரியராக உங்களை சகோ.ச்சீனா நியமித்து விட்டாரா..? இப்போதே அதற்கு ஏதும் பயிற்சி எடுக்கிறீர்களா..? :-))
அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

Peer Mohamed said...

Thank you sister Amina !!

Peer Mohamed said...

//அடுத்த வார வலைச்சர ஆசிரியராக உங்களை சகோ.ச்சீனா நியமித்து விட்டாரா..? இப்போதே அதற்கு ஏதும் பயிற்சி எடுக்கிறீர்களா..? :-))//

Thank you brother Ashik.
அப்படி எதுவும் திட்டம் இல்லை :)

திருபுவனம் வலை தளம் said...

அண்ணா சூப்பர்....
இப்படியும் பதிவு போடலாமா ..?
கலக்கீட்டீங்க

Peer Mohamed said...

ஆமா தம்பி..நிறைய நேரம் மத்தவங்க எழுதறத படிசிட்ட்ருந்தா நாம எப்பிடி எழுதறது..அதுனால படிச்சத பகிர்ந்துட்டா போச்சு :) :)
எப்பிடி ஐடியா :)


வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
படித்த பிடித்த விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்று
அதே சமயத்தில் பிரபல எழுத்தாளரை விட்டது பெருங்குறை அவரை யார் என்று நானே சொல்ல முடியாது
ஹா ஹா

Peer Mohamed said...

wa alaikumussalam

நீங்கதானே அந்த பிரபலம் :)

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே

அண்ணா சூப்பர்....கலக்கீட்டீங்க,,

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ.....

பகிர்வுக்கு நன்றி

Post a Comment